இந்திய மற்றும் உலக அழகிப் போட்டிகளில் வாகை சூடியவரும், பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென், தான் எதிர்கொண்டு மீண்ட மாரடைப்பு அனுபவம் குறித்து பொதுவெளியில் பகிர்ந்திருக்கிறார்.
தனது மாரடைப்பு அனுபவங்கள் குறித்து அவர் வெளியிட்ட பதிவில், “எனக்கு பெரிய அளவிலான மாரடைப்பு ஏற்பட்டது. இதயத்துக் கான பிரதான ரத்தக்குழாயில் 95% அடைப்பு கண்டறியப்பட்டது. இதற்கான அறுவை சிகிச்சையில் இதய அடைப்பு நீக்கப்பட்டு எனக்கு ஸ்டன்ட் வைக்கப்பட்டது. இன்னும் சிலகாலம் வாழ்வதற்காக திரும்ப வந்திருக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். மார்ச் 4 அன்று இன்ஸ்டாகிராம் வாயிலாக நேரலை யில் தோன்றிய சுஷ்மிதா சென் இது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ரசிகர்களுடன் உற்சாகமாக பகிர்ந்து கொண்டார்.
47 வயதாகும் சுஷ்மிதா சென், காதல் முறிவு உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்களால் வாழ்க்கைத் துணையின்றி வாழ்ந்து வருகிறார். தனது வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்கும் வகையில் 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்தும் வளர்த்து வருகிறார். இந்த சூழலில் சுஷ்மிதா சென்னுக்கு ஏற்பட்ட மாரடைப்பும், அதிலிருந்து அவர் மீண்ட அனுபவமும் மாரடைப்பு தொடர்பான விழிப் புணர்வுகளை பொதுவெளியில் அதிகரித் துள்ளன.
பிரபலங்கள் பலரும் மாரடைப்பு கண்டு அகால முடிவுக்கு ஆளா வதன் மத்தியில், சரியான நேரத்தில் மருத்துவ உதவியை நாடினால் 95% அளவுக்கு முற்றிய அடைப் பிலிருந்தும் சிகிச்சை மூலம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம் என்பதை சுஷ்மிதா சென்னின் அனுபவம் மற்றவர் களுக்கு பாடமாக உணர்த்தி இருக்கிறது.
No comments:
Post a Comment