தமிழ்நாடு - புதுச்சேரி வழகுரைஞர் சங்கங்களின் கூட்டமைப்பு - நன்றி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 21, 2023

தமிழ்நாடு - புதுச்சேரி வழகுரைஞர் சங்கங்களின் கூட்டமைப்பு - நன்றி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை 18.3.2023 அன்று தலைமைச் செயலகத்தில், அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் எஸ்.பிரபாகரன், தமிழ்நாடு - புதுச்சேரி வழகுரைஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் என்.மாரப்பன், துணைத் தலைவர் பிரிசில்லா பாண்டியன், பொதுச் செயலாளர் பி.காமராஜ், பொருளாளர் கே.முரளிபாபு, தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், கவுரவ செயலாளர் ஆர்.அப்பாவு மற்றும் நிர்வாகிகள் சந்தித்து, வழக்குரைஞர்கள் சேம நல நிதியை 7 இலட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தியதற்காகவும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலிற்கு ரூ.20 கோடியை மூலதன வைப்பு தொகையாக அளித்தமைக்காகவும், சென்னையில் நீதிமன்ற கட்டடங்களை அமைக்க 7 ஏக்கர் நிலம் நிதி ஒதுக்கீடு செய்தமைக்காகவும் நன்றி தெரிவித்தனர். உடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.வில்சன், என்-ஆர்.இளங்கோ, அரசு தலைமை வழக்குரைஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆகியோர் உள்ளனர்.


No comments:

Post a Comment