சென்னை, மார்ச் 5- தமிழ்நாட்டில் முழு பாதுகாப்புடன் இருப்பதாக புலம்பெயர் தொழிலாளர்கள் விளக்கமளித்து உள்ளனர். தமிழ்நாட்டில் தங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளனர். சொந்தக் காரணங்களுக்காக ஊருக்கு செல்வதை தவறாக சித்தரித்து வதந்தி பரப்புவதாக தொழிலாளர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
பணிபுரியும் இடங்களிலும் தங்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளனர். தமிழர்களுடன் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நாங்கள் சமூகமாக இருக்கிறோம் என்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். பண்டிகைகள் நெருங்குவதால் பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போது ஹோலிக்காக ஊருக்கு செல்லும் நாங்கள் விரைவில் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்து விடுவோம் என்றும் கூறினர். பணிபுரியும் இடங்களில் 4 புலம்பெயர் தொழிலாளர்களும் தமிழர்கள் 20 பேர் இருந்தாலும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் உணவு நேரத்தில் அனைவரும் சேர்ந்தே உணவருந்துகிறோம் - எந்த பிரச்சினையும் இல்லை என்றும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment