செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 9, 2023

செய்தியும், சிந்தனையும்....!

சிதைப்பதுதான்....

* கருவிலேயே குழந்தைக்கு கீதை, ராமாயணப் பாடம்.

- ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்புத் திட்டம்

>> கருவை சிதைப்பதுதான் ஆர்.எஸ்.எஸின் நோக்கமோ!

பி.ஜே.பி.யின் மாடல்

* நாட்டின் முன்னேற்றம் கருதி தியானத்தில் ஈடுபட்டார் டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால். 

>> ஊரை ஏமாற்றுவதில் பக்தி வேடம் தரிக்கிறாரோ, இது பி.ஜே.பி.யின் மாடல்.

மேலிடத்தின் குட்டோ!

* பி.ஜே.பி. - அ.தி.மு.க. கூட்டணியில் மோதல் இல்லை. 

- அண்ணாமலை பேட்டி

>> ஏன், மேலிடத்தின் குட்டோ!

கடவுளின் கடாட்சம் இல்லையோ...

* குலுக்கல் முறையில் பரிசு விழுந்ததாக அர்ச்ச கரிடம் ரூ.14.25 ஆயிரம் மோசடி. 

>> அர்ச்சகருக்குக் கடவுளின் கடாட்சம் இல்லையோ!

No comments:

Post a Comment