புதுடில்லி, மார்ச் 18- நாடாளுமன்ற மக்களவையில் ஒன்றிய கல்வி இணை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் அளித்த எழுத்துப்பூர்வ பதில் ஒன்றில், நாட்டின் முன்னணி கல்வி மய்யங்களான அய்.அய்.டி., என்.அய்.டி. மற்றும் அய்.அய்.எம். ஆகியவற்றில் கடந்த 2022ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண் ணிக்கை 2 ஆண்டுகளுக்கு பின்னர் அதிகரித்துள்ளது.
2022ஆம் ஆண்டில் மாணவர் தற்கொலை எண் ணிக்கை, 2019ஆம் ஆண்டில் இருந்த எண்ணிக்கைக்கு இணையாக 16 ஆக உள்ளது. அவர்களில் 8 பேர் அய்.அய்.டி.யை சேர்ந்தவர்கள். 7 பேர் என்.அய்.டி. மாணவர்கள். ஒருவர் அய்.அய்.எம். மாணவர் ஆவார் என தெரிய வந்து உள்ளது. எனினும், இந்த புள்ளி விவரங்களின்படி, 2020ஆம் ஆண்டில் 5 தற்கொலைகளும், 2021ஆம் ஆண் டில் 7 தற்கொலைகளும் நடந்து உள்ளன. கரோனா பெருந் தொற்று பரவலின்போது வகுப்புகள் சீராக நடைபெறாத நிலையில், இந்த தற்கொலைகள் குறைந்து காணப்பட்டு உள்ளன. மாணவர்களும் அதிக நேரம் வீடுகளில் செல விட்டு வந்தனர். இந்த எண்ணிக்கை அதிகரிப்பு கவனத்திற் குரிய விசயம் என்பதுடன், கல்வி தொடர்புடைய அழுத் தம், குடும்ப விவகாரங்கள், தனிப்பட்ட காரணங்கள் மற் றும் மனநல விவகாரங்கள் ஆகியவை முதன்மை காரணங் களாக இருக்க கூடும் என்று அரசு தெரிவித்து உள்ளது.
No comments:
Post a Comment