வல்லம். தஞ். 18 - பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) சமூகப்பணித்துறை தஞ்சாவூரில் இயங்கி வரும் செட் இன்டியா தொண்டு நிறுவனத்துடன் பல்வேறு சமூக வளர்ச்சி வளர்ச்சி சமூக நல்வாழ்வு சார்ந்த பணிகளையும், திட்டங்களையும், ஆய்வுகளையும் இணைத்து செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொழுத்திடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய பல் கலைக்கழக துணைவேந்தர் பேரா செ.வேலுசாமி: சமூகத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகளையும், தேவைகளையும் அறிந்தும் ஆய்வின் அடிப்படையிலும் திட்டங்கள் வடிவமைத்து செயல்பட ஆலோசனை வழங்கினார்.
இதனை தொடர்ந்து செட் இன்டியா நிர்வாக இயக்குநர்
பெ.பாத்திமாராஜ் தனது உரை யில்: கடந்த 24 ஆண்டுகளாக தங்கள் நிறுவனம் நமது மண்ணின் கலை மற்றும் கலாச்சார வளர்ச்சி யோடு பெண்கள் மற்றும் குழந்தை கள் உரிமைகள் பாதுகாப்பதற்காக பல்வேறு பணிகளை செய்து வருவதாக கூறினார்.
2009 ஆண்டு முதலே பெரியார் மணியம்மை பல்கலைக்கழக சமூக பணி மாணவர்களுக்கு களப்பணி பயிற்சி அளித்து வருவதாகவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் மேலும் பல்வேறு பயிற்சிகள், கருத்து பட்டறைகள் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ள வழி வகுக்கும் என்றார். முன்னதாக பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்ய இயக்குநர் (பொ) முனைவர் ஆனந்த் ஜெரார்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் சமூகப்பணி மாணவர்களுக்கு தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ள பெரும் உதவியாக இருக்கும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா செ.வேலு சாமி மற்றும் பதிவாளர் பேரா பி.கே.சிறீவித்யா, கல்வி புல முதன் மையர் அ.ஜார்ஜ், அறிவியல் மேம் பாடு மற்றும் ஆராய்ச்சி வெளியீட் டிற்கான பயிற்சி மய்ய இயக்குநர் பி.பாலகுமார், ஆராய்ச்சி புல முதன்மையர், முனைவர் குமரன் மனித நேய அறிவியல் மற்றும் மேலாண்மை புல முதன்மையர் பி.விஜயலெட்சுமி செட் இன்டியா நிருவாக இயக்குநர், பொ.பாத் திமாராஜ், செந்தில்குமார் அறங் காவலர், திட்ட இயக்குநர் ப.எடில்பர்ட், உயிரி தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி புல முதன்மையர் குமரன் ஆகியோர் கலந்து கொண் டனர்.
உதவிப் பேராசிரியர் முனைவர் சூ.ஞானராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
சமூகப்பணித்துறை தலைவர் முனைவர் பரமேஸ்வரன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment