காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் ஒன்றிய அரசு முனைப்பு காட்டவில்லை அமைச்சர் துரைமுருகன் சாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 9, 2023

காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் ஒன்றிய அரசு முனைப்பு காட்டவில்லை அமைச்சர் துரைமுருகன் சாடல்

திருச்சி, மார்ச் 9- "காவிரி- --- - குண் டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த, ஒன்றிய அரசு முனைப்பு காட்டவில்லை,'' என, தமிழ்நாடு நீர் வளத்துறை அமைச் சர் துரைமுருகன் குற்றம் சாட் டினார்.

திருச்சி விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:

காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை, ஒன்றிய அரசு தான் செயல்படுத்த வேண்டும். ஆனால், அந்த திட்டத்தை செயல்படுத்து வதில், ஒன்றிய அரசு முனைப்பு காட்டவில்லை.

திடீரென கூட்டத்தை கூட்டி, அது பற்றி பேசி விட்டு, பின் மறந்து விடுவர். பல மாநிலங்கள் இணைந்து செயல்படுத்த வேண்டிய திட்டம் என்பதால், ஒன்றிய அரசு தான் பெரும் பங்காற்ற வேண்டும்.

ஒரு கட்சி, ஆட்சியில் இருக்கும் போது துவங்கும் திட்டங்களை, முடிக்கும் முன்னதாகவே, ஆட் சியை விட்டு இறங்கி விடலாம்.

அதற்காக, மக்கள் வரிப்பணத் தில் துவங்கிய திட்டத்தை, 'மாற்று கட்சியினர் கொண்டு வந்த திட்டம்' என்ற குறுகிய நோக்கத்துடன், அடுத்து ஆட்சிக்கு வரும் கட்சி, அந்த திட்டத்தை கைவிடக் கூடாது.

ஆனால், அந்த சித்து விளை யாட்டை அ.தி.மு.க.,வினர் செய் தனர். தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த தாமிரபரணி - கருமேனியாறு திட்டத்துக்கு, நிதி ஒதுக்காமல் கிடப்பில் போட்டு விட்டனர். அந்த குறுகிய நோக்கம் எங்களுக்கு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment