சரிகிறது... சரிகிறது பங்கு சந்தை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 3, 2023

சரிகிறது... சரிகிறது பங்கு சந்தை!

மும்பை, மார்ச் 3- பங்குச் சந்தை தொடர் சரிவில் இருந்து வந்த நிலையில், 1.3.2023 அன்று மீண்டது. ஆனால் அதை தக்க வைக்க முடியாமல், நேற்று மீண்டும் சரிவைக் கண்டுள்ளது.

உலக சந்தைகளின் மந்த மான போக்கு மற்றும் வெளி நாட்டு முதலீடுகள் தொடர்ந்து வெளியேறுவது போன்ற கார ணங்களால், நேற்று பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' நேற்றைய வர்த்தகத்தின் இறு தியில், 502 புள்ளிகள் இழப்பை சந்தித்தது. இது கிட்டத்தட்ட 1 சதவீத சரிவாகும்.

நேற்றைய பங்கு வர்த்தகத் தில், சென்செக்ஸ் 58,909 புள் ளிகளில் நிலை பெற்றது. இதே போல், தேசிய பங்குச் சந்தை யின் குறியீட்டு எண் 'நிப்டி'யும் வர்த்தகத்தின் இறுதியில் 129 புள்ளிகள் சரிந்து, 17,321 புள்ளிகளில் நிலை பெற்றது.

சென்செக்ஸ் பிரிவில், நேற்று 'மாருதி சுசூகி, ஆக்சிஸ் பேங்க், டி.சி.எஸ்., இன்போசிஸ், பார்தி ஏர்டெல்' போன்ற நிறு வன பங்குகள் விலை சரிவைக் கண்டன. 'பவர்கிரிட், எச்.சி.எல்., சன் பார்மா' போன்ற நிறுவன பங்குகள் விலை உயர்வை சந்தித்தன.

பணவீக்கம் இன்னும் சிறிது காலத்துக்கு நீடிக்கும் என அமெரிக்க தரவுகள் காட்டு வதை அடுத்து, உலக சந்தையில் முதலீட்டாளர்களிடம் பங்கு களை விற்பனை செய்யும் மன நிலை அதிகரித்துள்ளது. இந்திய சந்தையை பொறுத் தவரை, வெளிநாட்டு முதலீட் டாளர்கள், பங்குகளை விற்று விட்டு வெளியேறி வருகின்றனர்.

No comments:

Post a Comment