வல்லம், மார்ச் 6- வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் ஒவ் வொரு ஆண்டும் மண்டல அள விலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளை வென்று சாதனை படைத்து வருகின்றார்கள்.
இந்த ஆண்டு மயிலாடுதுறையில் மண்டல அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளான வளைபந்து(Tenni Koit) மற்றும் எறிபந்து (ThrowBall)விளையாட்டுப் போட்டிகளில் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் முதலிடம் வென்று சாதனை படைத்துள் ளனர்.
மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்குபெற தகுதிப்பெற்றுள்ளனர்.
மேலும் அங்கு நடைபெற்ற ஈட்டி எறிதல்(Javelin Throw)மற்றும் வட்டு எறிதல் (Discus Throw) ஆகிய போட்டிகளில் முதலிடம் வென்றார் மாணவி க.ராஜவேணி.
கூடைப்பந்து (Basket Ball) மற்றும் கைப்பந்து(Volley Ball) போட்டிகளில் இரண்டாம் இடம் பெற்றதுடன், பூப்பந்து (Ball Badminton) மற்றும் கைப்பந்து போட் டிகளில் மூன்றாம் இடத்தையும் வென்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளை இக்கல்லூரி முதல்வர் முனைவர் டாக்டர். இரா.மல்லிகா பாராட்டினார்.
இந்நிகழ்வில் துணை முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் உடற் கல்வி இயக்குநர் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment