சென்னை,மார்ச்9- ‘ஆன்லைன் ரம்மி’ போன்ற இணையவழி சூதாட்டத்துக்கு தடைச் சட்டம் மீண்டும் நிறைவேற்றினால் ஆளுநர் ஒப்புதல் அளித்தாக வேண்டும் என்பது சட்டம் என தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர்
எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.
இணையவழி சூதாட்டத்தை தடை செய்வது மற்றும் இணைய வழி விளையாட்டுகளை முறைப் படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் தமிழ்நாடு அரசால் குழு அமைக் கப்பட்டது. இந்தக் குழு பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைக் கேட்டு, ஏற்கெ னவே உள்ள விதி களின்படி அவற்றைக் கட்டுப்படுத்த இயலாது என்பதால், புதிதாக சட்டம் இயற்ற பரிந்துரைகளை வழங்கியது.
அவசர சட்டம் - ஒப்புதல்
இந்தப் பரிந்துரைகள் அடிப் படையில், தமிழ்நாடு இணையவழி சூதாட்ட தடை மற்றும் இணைய வழி விளையாட்டு ஒழுங்குபடுத் துதல் தொடர்பான அவசர சட்டம் உருவாக்கப்பட்டு, அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப் பட்டது. அவசர சட்டத்துக்கு ஆளு நர் ஆர்.என்.ரவி கடந்த ஆண்டு அக். 1-ஆம் தேதி ஒப்புதல் அளித்தார். அக். 3-ஆம் தேதி அவசர சட்டம், அரசிதழில் வெளியிடப்பட்டது.
இதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதி நடை பெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தில், அவசர சட்டத்துக்கு மாற்றாக சட்டம் கொண்டு வர முடிவு செய் யப்பட்டது. இதற்கான மசோ தாவை பேரவையில் சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தாக்கல் செய்தார். சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற் றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
வலியுறுத்தினார்
பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா தொடர்பாக, பல்வேறு விளக்கங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கோரியிருந்தார். அதற்கு, ஒரே நாளில் தமிழ்நாடு அரசும் விளக்கங்களை அளித்தது. அதன்பின், கடந்த ஆண்டு டிச. 2-ஆம் தேதி ஆளுநரை சந்தித்த சட் டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, இணையவழி சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் படி வலியுறுத்தினார்.
இதற்கிடையில், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆளுநர் ரவியைச் சந்தித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. சட்டப் பேரவையில் மசோதா நிறை வேற்றப்பட்டு 5 மாதங்கள் ஆன நிலையில், அதன் மீது ஆளுநர் எந்த முடிவையும் எடுக்காமல் இருந்தார்.
நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா
இந்நிலையில், தற்போது இணையவழி சூதாட்ட தடைச் சட்ட மசோதாவை தமிழ்நாடு அரசிடமே திருப்பியனுப்பியுள் ளார். பேரவையில் நிறைவேற்றப் பட்ட சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியது ஏன் என்பது தொடர் பாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகள் தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் கீழ் வருவதால், அவற்றைத் தடை செய்து சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் மாநில சட்டப்பேரவைக்கு இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் இன்று விவாதம்
சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (9.3.2023) நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இணையவழி சூதாட்டத்துக்கு தடைச் சட்ட மசோதவை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பிய அனுப்பியது குறித்து சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, ‘ஆன்லைன் ரம்மி’ போன்ற இணையவழி சூதாட் டத்துக்கு தடைச் சட்டம் மீண்டும் நிறைவேற்றினால், அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தாக வேண்டும் என்பது தான் சட்டம் என்று கூறினார்.
மேலும், இந்த சட்டம் 2 ஆவது முறையாக நிராகரிக்கப்படவில்லை, இது முதல் முறைதான். இதற்கு முன்பாக அந்த சட்டம் தொடர் பான சில கேள்விகளைக் கேட்டு ஆளுநர் அனுப்பியதாக விளக்கம் அளித்தார்.
இதனிடையே, இணையவழி சூதாட்டத்துக்கு தடைச் சட்ட மசோதவை திருப்பிய அனுப்பிய ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டம் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment