தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸார் போராட்டம்
சென்னை மார்ச் 24 மோடி என்ற பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசியது தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை வருவ தற்காக கும்பகோணம் ரயில் நிலையத் தில் காத்திருந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, செய்தி அறிந் ததும், அந்த ரயில்நிலையத்தில் தான் செல்ல இருந்த ரயிலை மறித்து தொண் டர்களுடன் போராட்டம் நடத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இந்தியாவில் பேச் சுரிமை, கருத்துரிமை இருக்கிறது. ராகுல் காந்தி ஒரு கூட்டத்தில் பேசினார் என்று காவல்துறை ஒரு குறிப்பை கொடுத்தது. அதன் அடிப்படையில் மாவட்ட நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அவர் யாரையும் குறிப் பிட்டும், ஒப்பிட்டும் சொல்லவில்லை. 1000 தடைகள் வந்தாலும் ராகுல் காந்தி முன்னேறிச் செல்வார்’’ என்றார்.
சட்டப்பேரவைக் கூட்டத்தில் காங் கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர்கள் நேற்று (23.3.2023) பங்கேற்றிருந்த நிலை யில், ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அனைவரும் வெளியில் வந்து, கழுத்தில் கருப்பு பட்டையை அணிந்து கொண்டு, நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர்.மேலும், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல் வப்பெருந்தகை தலைமையில் சட்டப் பேரவை வளாகத்தில் பாஜகவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி ஆர்ப் பாட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து வளாகத்துக்கு வெளியே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடு பட்டனர். பின்னர்செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது: சுதந்திரப் போராட்டத்தில் சிறைசென்ற குடும்பம் ராகுல் காந்தியின்குடும்பம். அவர் மீது அவதூறு வழக்கு போட்டு, 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி யுள்ளனர். 20ஆண்டுகள் சிறையில் வைத்தாலும்ராகுல் காந்தியின் குரல் மக்களுக்காக ஒலித்துக் கொண் டிருக்கும். உண்மைக்குப் புறம்பான இந்தத் தீர்ப்பை நீதிமன்றத்தின் மூல மாக தகர்த்தெறிவோம். ராகுலின் அரசி யல் எதிர்காலத்தை முடக்கும் நோக்கில், பாஜக, ஆர்எஸ்எஸ் இவ் வாறு செய் கின்றன. அதை மக்கள் தகர்த்தெறி வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
சத்தியமூர்த்தி பவனில்..
சென்னை சத்தியமூர்த்தி பவனில் திரண்ட காங்கிரஸ் தொண்டர்கள், மாநில துணைத் தலைவர்கள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, ஆ.கோபண்ணா ஆகி யோர் தலைமையில், சூரத் நீதிமன்றத் தீர்ப்புக்குஎதிராக ஆர்ப்பாட்டம் நடத் தினர். சாலை மறியல் செய்ய முயன் றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டதலைவர்கள் எம்.எஸ்.திரவி யம், டில்லிபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோன்று திருச்சி, மதுரை,நெல்லை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மறியல் போராட்டங்களில் காங்கிரஸார் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment