புதுடில்லி, மார்ச் 4 சீனர்களுடன் இணைந்து போலி நிறுவனங்கள் நடத்தியதாகவும், பணமோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டப்படும் தொழிலதிபர் கவுதம் அதானியின் அண்ணனுக்கு எதிராக ஒன்றிய அரசு விசாரணை மேற்கொள்வது சரியா அல்லது அந்தக் குற்றத்துக்குத் துணை போவது சரியா என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக அந்தக் கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் 3.3.2023 வெளியிட்ட அறிக்கை: கவுதம் அதானியின் அண் ணன் வினோத் அதானியுடன் இணைந்து பல்வேறு அதானி குழும நிறுவனங்களில் சாங் சுங்-லிங் என்ற சீனர் இயக்குநராக இருந்துள்ளதாக பனாமா ஆவண ஊழல் வழக்கில் அவரின் பெயரும் குறிப்பிடப்பட்டது. கடந்த 2017-ஆம் ஆண்டு அய்.நா.வின் தடைகளை மீறி பெட்ரோலிய பொருள்களை வடகொரிய கப்பலுக்கு கோட்டி என்ற எண்ணெய்க் கப்பல் அனுப்பியதால், அந்தக் கப்பலை தென் கொரியா பறிமுதல் செய்தது. அந்தக் கப்பல் சாங் சுங்-லிங்கின் மகன்களுக்குச் சொந்தமாக இருந்தது. அய்.நா. மற்றும் அமெரிக்கா தடை விதித்த பட்டியல் களில், கோட்டி கப்பல் மற்றும் கோட்டி கார்ப்பரேஷன் நிறுவனம் உள்ளன. சாங் சுங்-லிங்கின் மகன்களில் ஒருவரான சியென்-டிங் சாங் பிஎம்சி புராஜக்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளராகவும் அறியப்படுகிறார். அந்த நிறுவனம் முந்த்ரா மற்றும் இதர அதானி குழும துறைமுகங்களின் கட்டுமானப் பணி களுக்கு உதவியது. அதானி குடும்பத் துடன் சாங் சுங்-லிங்குக்கு உள்ள உண் மையான உறவு என்ன? துறைமுகங்கள், விமான நிலையங்கள் என இந்தியாவின் மதிப்புமிக்க உள்கட்டமைப்பு சொத்து களைக் கட்டுக்குள் வைத்திருப்பதுடன், பிரதமர் மோடியுடன் நெருங்கிய உறவு கொண்டிருக்கும் ஒரு குழுமத்தின் மீது சீனா மற்றும் வடகொரிய அரசுகளுக்கு உள்ள செல்வாக்கு என்ன? சீனாவும், வடகொரியாவும் செல்வாக்கு செலுத் தக்கூடிய ஒரு வர்த்தக குழுமத்தை (அதானி குழுமம்) சார்ந்திருப்பதன் மூலம் இந்தியாவின் முக்கிய சொத்து களின் பாதுகாப்பை பொறுப்பற்ற முறையில் பிரதமர் ஆபத்தில் ஆழ்த்து கிறாரா?
சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் அதானி குழுமத்துக்கும், சீனர் களுக்கும் இடையே பல கறைபடிந்த தொடர்புகள் இருப்பது ஏன்? வினோத் அதானி, சைப்ரஸ் நாட்டு குடியுரிமை பெற்றவர் என்று அதானி குழுமம் பலமுறை குறிப்பிட்டுள்ளது. ஆனால் துபாயில் உள்ள சொத்துகளின் ஆவணப் பதிவுகள், வினோத் அதானியிடம் 2026-ஆம் ஆண்டு வரை பயன் படுத்தக் கூடிய இந்திய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) இருப்பதாகத் தெரிவிக் கின்றன. இந்தியாவில் இரட்டை குடியுரிமைக்கு அனுமதியில்லை. அப்படி இருக்கும்போது சைப்ரஸ் குடி யுரிமை பெற்றுள்ளதாகக் கூறப்படும் வினோத் அதானியிடம் எப்படி இந்திய கடவுச்சீட்டு உள்ளது? சீனர்களுடன் கூட்டு சேர்ந்து போலி நிறுவனங்கள் நடத்தியதாகவும், பணமோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டப்படும் வினோத் அதானிக்கு எதிராக ஒன்றிய அரசு விசாரணை மேற்கொள்வது சரியா அல்லது அந்தக் குற்றத்துக்குத் துணைபோவது சரியா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment