முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிவு
சென்னை, மார்ச் 23 தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல் குறித்த சட்ட முன் வடிவை மீண்டும் நிறைவேற்ற சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்து உரையாற்றினார்.
சட்டமன்றத்தில் இன்று (23.3.2023) சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள் அறிவித்ததாவது:
''மாண்புமிகு ஆளுநர் அவர்களிடமிருந்து வரப்பெற்ற 6.3.2023 ஆம் நாளிடப்பட்ட நேர்முகக் கடிதம், குறிப்பு மற்றும் திருப்பி அனுப்பப்பட்ட 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்கு முறைப் படுத்துதல் சட்ட முன் வடிவு எண்: 53/2022 பேரவை முன் வைக்கிறேன்'' என அறிவித்தார்.
இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இச்சட்ட முன்வடிவு குறித்துப் பேசுகையில்:-
''19.10.2022 ஆம் நாளன்று சட்டமன்றப் பேரவையால் நிறைவேற்றப்பெற்று, மாண்புமிகு ஆளுநர் அவர்களால் 6.3.2023 ஆம் நாளன்று திருப்பி அனுப்பப் பெற்ற 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்கு முறைப்படுத்துதல் சட்ட முன் வடிவு எண்: 53/2022 - மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பெறவேண்டும் எனக் கோரியதோடு, மேற்படி சட்ட முன்வடிவு மீண்டும் நிறை வேற்றப்பட வேண்டும் என்றும், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த சட்ட முன் வடிவை ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மசோதா நிறைவேற்றியது.
No comments:
Post a Comment