பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி சேலம் மற்றும் மேட்டூர் மாவட்டங்கள் ஒருங்கிணைத்த பகுத்தறிவு பயிற்சிப் பட்டறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 3, 2023

பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி சேலம் மற்றும் மேட்டூர் மாவட்டங்கள் ஒருங்கிணைத்த பகுத்தறிவு பயிற்சிப் பட்டறை


சேலம், மார்ச், 3- 11.2.2023 அன்று காலை 9 மணிக்கு சேலம் தமிழ்ச் சங்கம் க.ராஜாராம் அரங்கத்தில் பகுத்தறிவாளர்கள் கழகம்,  பகுத்தறிவு ஆசிரியர் அணி சேலம் மற்றும் மேட்டூர் மாவட்டங்கள் ஒருங்கிணைப்பில் பகுத்தறிவு பயிற்சிப் பட்டறை  நடைபெற்றது.

வருகை புரிந்தோர் அனைவரும் தங்களை பதிவு செய்து கொண்டு பேனா, குறிப்பேடு, அடையாள அட்டை, நிகழ்ச்சி நிரல்  ஆகியவற்றை பெற்றுக் கொண்டு இருக்கைகளில் சென்று அமர்ந்தனர்.

தொடக்க விழா காலை 9 மணிக்கு சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வீரமணி ராஜு தலைமையில் நடைபெற்றது.

கழக பொதுக்குழு உறுப் பினர் பழனி. புள்ளையண்ணன் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் மற்றும் வருகை தந்த அனைவரையும் சந்தித்து உரையாடிச் சென்றார்.

மாவட்ட காப்பாளர் கி.ஜவகர், மண்டல தலைவர் கவிஞர் சி. சுப்பிரமணி, மண்டல செயலாளர் விடுதலை சந்திரன், மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் சி. மதியழகன், சேலம் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி தலைவர் ப. கந்தவேல், மேட்டூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி தலைவர் 

பு. வீரமணி, சேலம் மாவட்ட அமைப்பாளர் மு. தங்கராஜ், சேலம் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி செயலாளர் க.வேல்முரு கன், மேட்டூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் திராவிடன் ராஜ் ஆகியோர் முன்னிலை ஏற்றார்கள்.

மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் இடைப்பாடி கோவை. அன்புமதி வரவேற்று உரையாற்றினார்.

பயிற்சிப் பட்டறை நோக்கம், தேவை பற்றி பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் உரையாற்றினார்.

 தொடர்ந்து பட்டறையை தொடங்கி வைத்து திராவிடர் கழக பொதுச்செயலாளர் வி.அன்புராஜ் உரையாற்றினார். 

சேலம் பகுத்தறிவாளர் கழகச் செயல் பாடுகள் பற்றி குறிப்பிட்டு ஏற்பாட்டாளர்களைப் பாராட்டினார். இப்பயிற்சிப் பட்டறை நடைபெறும் காலம் எவ்வளவு முக்கியமானது என்பது பற்றியும், எவ் வளவு முக்கியமான நேரத்தில் இப்பயிற்சி நடைபெறுகிறது என்பதையும் குறிப்பிட்டு மாவட்டத் தலைவர் வீரமணி ராஜு மற்றும் அவர்களது குழுவினரை, அவர் களது சிறப்புகளைக் கூறி பாராட்டினார். இதுபோன்று எல்லா மாவட்டங்களிலும் பயிற்சிப் பட்டறைகளும், கருத்தரங்கங்க ளும் நடைபெற வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

பயிற்சிப் பட்டறையின் தொடக்க உரையை எழுத்தாளர் மன்ற தலைவர் வா.நேரு ஆற்றினார்.

பயிற்சிப் பட்டறை என்பது என்ன என்பது பற்றியும் அது எப்படி இருக்கும்? வகுப்புகள் என்பது எப்படி அமைந் திருக்கும்? என்பது பற்றியும், ஒவ்வொரு வகுப்பு முடிந்தவுடன் பயிற்சியாளர்கள் தங்களுக்கு அவ்வகுப்பில் எழும் சந்தேகங் களை குறிப்பேட்டில் குறித்து வைத்து இறுதியில் கேட்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்கள். தொடர்ந்து பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

முதல் வகுப்பினை கழக சொற்பொழிவா ளர் இராம. அன்பழகன் ஜோதிடம், ஜாதகம், சகுனம், சடங்குகள் என்பது பற்றி மிக ஆழமாகவும், நகைச்சுவையாகவும் எப்படி இவை நம் அறிவுக்கு புறம்பானவை, அறிவியலுக்குப் புறம்பானவை என்பதையும், இவற்றைக் கொண்டு எப்படி நம்முடைய அறிவை மழுங்கடிக்கிறார்கள் என்பதை யும், இதிலிருந்து மீளுவது எப்படி என்பது பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார்.

 வகுப்பு முடிவில் பயிற்சியாளர்கள் தங்களுக்கு உள்ள சந்தேகங்களைக் கேட்டார்கள். இராம. அன்பழகன் உரிய விடையை விளக்கிக் கூறியதும் தெளிவு பெற்றார்கள்.

தொடர்ந்து தேநீர் இடைவேளை முடிந்தவுடன், கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் ‘மனித நேயம் ஒரு பகுத்தறிவு பார்வை...' என்கின்ற பொருளில் மிகச் சிறந்த உரையை நெகிழ்ச்சியான பல நிகழ்வுகளை கூறி பார்வையாளர்களையும், பயிற்சியாளர் களையும் நெகிழ வைத்தார்.

தந்தை பெரியார் எப்படிபட்ட மனித நேயத்துக்கு சொந்தக்காரர் என்பதை பல்வேறு நிகழ்வுகளைக் குறிப்பிட்டு விளக்கினார். மனிதநேயம் என்பது பகுத்தறிவின் அடிப்படை என்பதை விளக்கிக் கூறி, இந்த இயக்கம் எப்படிப்பட்டது என்பதையும், இந்த இயக்கத்தின் தலைவர் எப்படிப்பட்டவர் என்பதையும், இந்த இயக்கத்தில் இருப்பதை நாம் பெருமையாகக் கொள்ள வேண்டும் என்பதையும் கூறினார்.

தொடர்ந்து பேராசிரியை சு.கண்மணி பவர் பாயிண்ட் மூலம் எப்படி புராணங் களும், இலக்கியங்களும் நம்மை அடிமை யாக்கின...... எவ்வளவு மிகப் பெரிய மூட நம்பிக்கையில் நாம் இருந்து கொண்டிருக்கி றோம்......கடவுளைக் காட்டி எப்படி நம்மை ஏமாற்றினார்கள்... என்பதை எல்லாம் அடுக்கடுக்காக புராணங்களில் இருந்தும், இலக்கியங்களில் இருந்தும், கடவுள் கதைகளில் இருந்தும், மூடநம்பிக் கைகளையும், அறிவுக்கு ஒவ்வாத கருத்து களையும் தெளிவாக எடுத்துரைத்தார். 

மூடநம்பிக்கை ஒழிந்த சமுதாயம் எப்படி இருக்கும் என்பதையும் கூறினார். 

அவரது வகுப்பு முடிந்தவுடன் கேள்வி - பதில் நேரம் தொடங்கியது. பலரும் தங்களது வினாவை எழுப்பினார்கள். உரிய விளக்கமளித்ததும் தெளிவு பெற் றார்கள். தொடர்ந்து உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது.

ஜாதி, மதம், பெண் அடிமை என்னும் பொருளில் வழக்குரைஞர் சே.மெ.மதி வதனி அருமையான  தொடக்கத்தை வழங்கி  எப்படி ஜாதி கட்டமைக்கப்பட்டது? மதங்களைக் கொண்டு எப்படி நம்மை அடிமையாக்கினார்கள்? பெண் அடிமைத் தனம் எப்படி நம் மூளையில் புகுத்தப் பட்டது...... இதிலிருந்து விடுபடுவதற்கு என்ன வழி? எது மருந்து ? என்பதை எல்லாம் தெளிவாக விளக்கினார்.

இடையே அவரே வினாக்களை எழுப்பி விடைகளையும் அவரே வழங் க னார். வந்திருந்த பயிற்சியாளர்கள் ஆர்வமுடன் அவருடைய பேச்சை கேட்டனர்.

 பயிற்சியாளர்கள் ஜாதி குறித்து பல வினாக்களை எழுப்பினார்கள். அவற்றுக்கு  விடையளித்து தனது வகுப்பை நிறைவு செய்தார்.

அவரைத் தொடர்ந்து ‘ மூடநம்பிக் கைகளும் அறிவியலும்’ என்னும் பொரு ளில் மருத்துவர் கவுதமன் அவர்கள்  சாமி ஆட்டம் எப்படி வருகிறது? மூடநம்பிக் கைகள் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக நம் மீது ஏற்றப்படுகிறது. நம் மூளையில் ஏறிய பிறகு எப்படி நம்மை அவர்கள் அந்த மூட நம்பிக்கைகளைப் பயன்படுத்தி சுரண்டுகிறார்கள் என்பதை எல்லாம் விளக்கி கூறி அறிவியல் எப்படி எல்லாம் நம்மை செம்மைப்படுத்துகிறது, முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்கிறது.... அறிவியலால் நாம் பெறும் பயன்கள் என்ன? நோய் எப்படி உருவாகிறது? நோய்க்கான காரணங்களை கண்டறிவது எப்படி? என்பதை எல்லாம் சொல்லி நோய்க்கு ஏற்படுத்தப்பட்ட மூடநம்பிக்கைகளை எல்லாம் விளக்கிக் கூறி, ஒரு இதய அறுவை சிகிச்சை காணொலியை வழங்கி அறிவியல் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது என்பதையும், ஆனால் நம் மூடநம்பிக்கைகள் நம்மை எப்படி இன் னும் பிற்போக்கு தளத்தில் வைத்திருக் கின்றன என்பதை எல்லாம் தெளிவாக எடுத்துரைத்தார்.

 அவருடைய வாழ்க்கை அனுபவங்கள், அதில் அவர் வெற்றி கண்டது என்பதை பற்றி எல்லாம் தெளிவாக விளக்கி கூறினார்.

 அதனைத் தொடர்ந்து மாலை தேநீர் இடைவேளை அறிவிக்கப்பட்டது. இடை வேளை முடிந்ததும் ஈட்டி கணேசன் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியினை செயல்பாடுகளை செய்து காட்டி அசத்தினார் 

பயிற்சியாளர்கள் ஆச்சரியமடைந்த நிலையில் இதில் ஆன்மீகம் ஒன்றும் இல்லை அறிவியல் மட்டுமே என்பதைச் சொல்லி அழகாக அதை விளக்கி கூறிய போது பயிற்சியாளர்கள் தெளிவு பெற்றனர்.

எப்படி சாமியார்கள் நம்மை ஏமாற்று கிறார்கள் என்பதையும் மந்திரம் என்பது ஒன்றுமில்லை அது தந்திரமே என்பதையும் விளக்கி கூறினார்

ஒவ்வொரு நிகழ்வாக அவர் செய்து காட்டியதும் பயிற்சியாளர்கள் கைதட்டி மகிழ்ந்தனர். தாம் எப்படி எல்லாம் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்பதையும் உணர்ந்து கொண்டனர்.

தொடர்ந்து பயிற்சி பெற வந்திருந்த பயிற்சியாளர் ஒருவர் தான் கையில் கட்டி இருந்த கயிற்றினை தானே முன்வந்து இது அசிங்கம் என்றும், அறிவுக்கு ஒவ்வாது என கருதி மேடையிலேயே அதை நறுக்கி எறிந்தார். பயிற்சிப் பட்டறையில் ஆறு வகுப்புகள் நடைபெற்றன.  வழக்குரைஞர் செல்வகுமார், இமயவரம்பன் ஆகியோர் தங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்தார்கள். பயிற்சியாளர்களுக்கு நிகழ் வுகளை தொகுத்தும், இனி பயிற்சியாளர் கள் செய்ய வேண்டியது என்ன என்பதையும் குறித்து மாநில பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் அண்ணா சரவணன் சிறப்புரையாற்றினார். பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடை பெற்றது சான்றிதழை பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.தமிழ்ச் செல்வன் வழங்கினார். 

No comments:

Post a Comment