பா.ஜனதா ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராக வேண்டும் டி.கே.சிவக்குமார்-சித்தராமையா கூட்டாக வேண்டுகோள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 18, 2023

பா.ஜனதா ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராக வேண்டும் டி.கே.சிவக்குமார்-சித்தராமையா கூட்டாக வேண்டுகோள்

பெங்களூரு, மார்ச் 18- கருநாடக நிலத்தின் மீது மராட்டியம் தாக்குதல் நடத்தி இருப்பதால் பா.ஜனதா ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராக வேண் டும் என்று டி.கே.சிவக்குமார், சித்தராமையா கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ள னர். கருநாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்த ராமையா ஆகியோர் கூட்டாக நேற்று (17.3.2023) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒன்றிய-மாநில பா.ஜனதா அரசுகள் கருநாடகத்தை பல துண்டுகளாக பிரித்து மாநி லத்தை சீரழிக்க முயற்சி செய் கின்றன. கருநாடக எல்லையில் 864 கிராமங்களில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல் படுத்த மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.54 கோடி நிதியை அந்த மாநிலம் ஒதுக்கியுள்ளது. மராட்டி யத்தின் இந்த முடிவால் கரு நாடகத்தின் 6லு கோடி கன் னடர்களின் சுயமரியாதைக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது. பா.ஜனதாவின் இந்த சதிக்கு எதிராக கன்னடர்கள் ஒவ் வொருவரும் கடைசி வரை போராடுவார்கள். கருநாட கத்தின் நிலத்தை கொள்ளை யடிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். கருநாடகத்தின் சுயமரியாதை, கவுரவம், நிலத்தை பாதுகாக்க காங்கிரஸ் தொண்டர்கள் தங்களது உயி ரையும் தியாகம் செய்ய தயா ராக உள்ளனர். கருநாடகத்தின் நிலத்தை பறித்து கொள்ளும் முயற்சிக்கு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தான் நேரடி காரண மாக இருப்பார்கள்.

ஒன்றிய அரசின் உதவியு டன் மராட்டிய அரசு பட் டப்பகலில் அரசியல் சாச னத்தை படுகொலை செய்துள் ளது. மாநிலங்களின் கவுர வத்தை காக்கும் அரசியல் சாசன தத்துவங்களை பா.ஜனதா நாசப்படுத்துகிறது. மராட்டியம் தனது திட்டங் களை கருநாடக எல்லைக்குள் செயல்படுத்த முயற்சி செய்வது சட்டவிரோதம், அராஜகம் மற்றும் அரசியல் சாசனத்தின் விருப்பங்களை நாசப்படுத்தும் முயற்சி ஆகும். அரசியல் சாச னத்தின் 356-ஆவது பிரிவின் படி மராட்டிய அரசை கலைப்பது என்பது சரியான நடவடிக்கையாக இருக்கும். அதனால் குடியரசுத் தலைவர் உடனே மராட்டிய அரசை கலைக்க வேண்டும். இதுபற்றி எதுவும் பேசாமல் உள்ள முதல்- அமைச்சர் பசவராஜ் பொம்மை தனது பதவியிலிருந்து விலக வேண்டும். கருநாடகத்தின் நிலப்பிரதேசம் மற்றும் கவுர வம்  மீது நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலுக்கு கருநாட கத்தை சேர்ந்த ஒன்றிய அமைச் சர்கள் 4 பேர், 26 எம்.பி.க்கள் (சுயேச்சை எம்.பி. உள்பட) கார ணம் ஆகும். அவர்கள் தங்களின் பதவியிலிருந்து விலக வேண்டும்.

வருகிற சட்டமன்ற தேர்த லில் பா.ஜனதா அரசை தூக்கி எறிய மக்கள் தயாராக வேண் டும். இதன் மூலம் கருநாடகத் தின் கண்ணியத்தை காக்க வேண்டும். கருநாடகத்தின் கவுரவத்தை காப்பாற்ற மக்கள் காங்கிரசை ஆதரிக்க வேண் டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment