கல்லறையிலும் நினைவுகளை உயிர்ப்பிக்கும் நவீன அறிவியல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 30, 2023

கல்லறையிலும் நினைவுகளை உயிர்ப்பிக்கும் நவீன அறிவியல்

இறந்த மகனின் கடந்த காலத்தைப் பார்ப்பதற்கு க்யூ ஆர் கோடு பதித்த பெற்றோர்

கேரளாவில் இறந்த மகனின் நினைவுகளுக்கு நவீன அறிவியல் மூலம் பெற்றோர்கள் உயிரூட்டி யுள்ளனர். கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த 26 வயதே ஆன இளம் மருத்துவர் அய்வின் பிரான்சிஸ் கடந்த 2021 ஆம் ஆண்டு பேட்மின்டன் விளையாடிக் கொண்டி ருந்தபோது  உயிரிழந்தார். படிப்பில் மட்டுமின்றி விளையாட்டு, இசை என அனைத் திலும் சகலகலா வல்லவனாக வலம் வந்த தங்கள் மகனின் பிரிவால் பெற்றோர் மற்றும் குடும் பத்தினர் மிகவும் கவலையில் வாடி வந்தனர். இதனால் மறைந்த மகனின் திறமை களை உலகறியச் செய்ய விரும்பினர்.

அதன்படி, தனது தம்பி குறித்த தகவல்கள் அனைத்தையும் அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக அவரின் கல்லறையில் 'க்யூஆர் கோடு' பதிக்க அவரது அக்கா யோசனை தெரிவித்துள்ளார். அதன்படி, தங்கள் மகனின் கல்ல றையில் 'க்யூஆர் கோடு' பதித்தனர். இதனால் அவரின் நினைவூகளுக்கு பெற்றோர் உயிரூட்டி இருக்கிறார் கள். இறந்த மகனின் நினைவுகளுக்கு உயிரூட்டும் விதமாக மகனின் கல்ல றையில் அவரை பற்றி அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக க்யூஆர் கோடு வைத்த சம்பவம் கேரளாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத் தியுள்ளது.

QR Code. QR CODE என்பதன் ஆங்கில விரிவாக்கம் QUICK RESPONSE CODE .QR Code இல் அதிகப்படியான விவரங்களை சேமித்து வைக்க முடியும்னி.  QR Code படிப்பதற்கு தனித்துவமான கருவிகள் எதுவும் தேவைப் படுவது இல்லை. கேமரா மற்றும் இணைய வசதி கொண்ட அலை பேசி இருந்தாலே போதுமானது. இந்த தொழில் நுட்பத்தை தான் கேரள இணையர் தங்களது மகனைப் பற்றி அறிந்துகொள்ள பயன்படுத்தி உள்ளனர். இனி அந்தக் கல்லறைக்கு மட்டுமல்ல, அந்த கல்லறையின் படத்தை உல கின் எந்தப் பகுதியில் இருந்தும் தங்களது மொபைலில் ஸ்கேன் செய்தால் இறந்துபோன அந்த நபர் திரையில் தோன்றி தான் உயிரோடு வாழ்ந்த காலத்தின் நிகழ்வுகளை அனைவரோடும் பகிர்ந்து கொள்வார்.

No comments:

Post a Comment