தொடரட்டும் 'திராவிட மாடல்' ஆட்சி சாதனை! விபத்துக்குள்ளானவர்களை காக்கும் திட்ட வெற்றிபற்றி முதலமைச்சர் பெருமிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 17, 2023

தொடரட்டும் 'திராவிட மாடல்' ஆட்சி சாதனை! விபத்துக்குள்ளானவர்களை காக்கும் திட்ட வெற்றிபற்றி முதலமைச்சர் பெருமிதம்

சென்னை, மார்ச் 17- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சொன்னதைச் செய்வது மட்டுமல்ல; சொல்லாமலும் செய்வோம். செய்கிறோம்!

தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை. ஆனால் 'Golden Hours' காலக்கட்டத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் யாரும் பாதிக்கப்படக்கூடாதென, கடந்த 18-12-2021 அன்று  'இன்னுயிர் காப்போம்' திட்டத்தை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ மனையில் தொடங்கி வைத்தேன்.

இந்தியாவிலேயே முதன்முதலாகத் தமிழ்நாட்டில் உருவான இந்தத் திட்டம், ஒரு முன்மாதிரி திட்டம்!

இன்று அரிகிருஷ்ணன் என்பவர் 1,50,000-ஆவது பேராகப் பனிமலர் மருத் துவமனையில் சிகிச்சை பெற்று பயனடைந் திருக்கிறார்.

ஒன்றரை இலட்சம் பேர் அல்ல; அத்தனை குடும் பங்கள் காக்கப்பட்டுள்ளன என்ற நெகிழ்வோடு இதனைப் பகிர்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் தம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment