23.3.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* நீதிபதிகள் நியமனங்களில் ஒன்றிய அரசு தாமதம் ஏற்படுவது குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* வைக்கம் நூற்றாண்டு விழாவினை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* திப்பு சுல்தானை ஒக்கலிகா ஜாதியைச் சேர்ந்த உரி கவுடா, நஞ்ச கவுடா கொன்றார்கள் என ஆதாரம் இல்லாமல் புதிய கதையை விட வேண்டாம் என பாஜகவினருக்கு நிர்மலானந்தா சுவாமி அறிவுரை.
தி இந்து:
* சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக ஜான் சத்யனை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுத்துவதாக உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
2024 மக்களவைத் தேர்தலுக்கான கவுன்ட் டவுன் தொடங்கும் நிலையில், உத்தரப் பிரதேச அரசியலின் இரு துருவங்களான சமாஜ்வாதி, பாஜக ஆகிய இரு கட்சிகளும், 80 இடங்களின் முடிவைத் தீர்மானிக்கும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின (ஓபிசி) வாக்காளர்களை மீண்டும் ஒருமுறை கவரத் தொடங்கியுள்ளன.
தி டெலிகிராப்:
* ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ சில ஓய்வுபெற்ற நீதிபதிகளை "இந்தியாவுக்கு எதிரானவர்கள்" என்று கூறியதற்கு டில்லி உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி ரேகா ஷர்மா கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment