தந்தைக்கே தெரியாமல் சிறுநீரகத்தை கொடையாக அளித்த மகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 3, 2023

தந்தைக்கே தெரியாமல் சிறுநீரகத்தை கொடையாக அளித்த மகள்

நியூயார்க், மார்ச்  3     அமெரிக்கா வின் மிசோரி மாகாணம், கிர்க்வுட் நகரை சேர்ந்தவர் ஜான் (60). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரது 2 சிறுநீர கங்களும் செயலிழந்தன. அதன் பிறகு அவர் தொடர்ச்சியாக டயா லிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய மருத் துவர்கள் அறிவுறுத்தினர். குடும் பத்தினர் சிறுநீரகக் கொடை வழங்குவதை ஜான் விரும்பவில்லை. பல மாதங்கள் காத்திருப்புக்குப் பிறகு யாரோ ஒரு பெண் அவருக்கு சிறுநீரகத்தை கொடை அளிக்க  முன்வந்திருப்பதாக ஜானிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை அவர் ஏற்றுக் கொண்டார். கடந்த 16-ஆம் தேதி அவருக்கு வெற்றிகரமாக சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது.

உடல்நலம் தேறிய பிறகு தனக்கு சிறுநீரகம்   வழங்கிய பெண்ணை சந்திக்க அவர் விரும்பினார். இதன் படி சில நாள்களுக்கு முன்பு அந்த பெண் மருத்துவமனையில் ஜானை சந்தித்தார். சிறுநீரக  வழங்கிய பெண்ணை பார்த்ததும் அவர் உணர்ச்சிப்பெருக்கில் கண்ணீர் சிந்தினார். அந்தப் பெண் அவரது ஒரே மகள் டெலாய்னி (25). 

“எனது மகளா எனக்கு சிறுநீர கத்தை கொடையாக வழங்கினாள்’’ என்று அவர் கண்ணீர் மல்க கூறினார். மகளை ஆரத் தழுவி உச்சி முகர்ந்து வாழ்த்தினார். இந்த காட்சிப்பதிவு சமூக வலைதளங் களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து டெலாய்னி கூறிய தாவது: "எனது தந்தை அவதிப்படு வதை என்னால் தாங்கிக் கொள் ள முடிய வில்லை. நான் சிறுநீர கத்தை கொடை அளிக்க  முன்வந்த போது அவர் ஏற்றுக் கொள்ள வில்லை. அவருக்கே தெரியாமல் மருத்துவர்களை அணுகி சிறுநீரகம் வழங்கிடத் தயாரானேன். ஒரே வீட்டில் தந்தையுடன் வசித்தாலும், நான்தான் அவருக்கு சிறுநீரகம் வழங்குகிறேன் என்பதை கூற வில்லை. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு உண்மையை அறிந்ததும் அவரால் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை".

இவ்வாறு டெலாய்னி கூறி னார். ஜான் கூறும்போது, “எனது மகள் எனக்கு வாழ்வு அளித்திருக் கிறாள். உயிருள்ளவரை அவ ளுக்காக வாழுவேன்’’ என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment