18.3.2023 அன்று தினமணி நாளிதழின் பக்கம் 4இல் ‘ஈ.வெ.ரா. சாலையில் போக்குவரத்து மாற்றம்’ என்று தலைப்பிட்டுள்ள செய்தியில் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என்று குறிப்பிடுவதற்கு பதிலாக வெறுமனே ‘ஈ.வெ.ரா சாலை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
‘தினமணி’யில் ‘பெரியார் ஈ.வெ.ரா’ என்றும், ‘நெடுஞ்சாலை’ என்றும் குறிப்பிடுவதில் என்ன தயக்கம்?
இன்னமும் சிலர் பூந்தமல்லி நெடுஞ்சாலை, பூவிருந்த வல்லி நெடுஞ்சாலை என்று குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதெல்லாம் அவர்களின் அறியாமையாலா? தந்தை பெரியார் பெயரைத் தவிர்க்க வேண்டும் என்கிற உள் நோக்கத்தாலா?
தமிழ்நாடு அரசு, சென்னை பெருநகர மாநகராட்சி முறையாக சாலைகள் பெயரில் மாற்றம் செய்து அறி விக்கும்போது, அதனைப் பின்பற்றாமல் இருப்பதுதான் தங்களின் வழக்கம் என்று ‘பிடிவாதம்’ பிடிப்பவர்களின் உள்நோக்கம்தான் என்ன?
No comments:
Post a Comment