திருச்சி, மார்ச் 4- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் பெரியார் நலவாழ்வு சங்கம் மற்றும் Global Hunt Foundation இணைந்து “மகளிர் சுய சுகாதாரம்” என்ற தலைப்பில் 23.02.2023 அன்று காலை 11 மணியளவில் மருந்தியல் பட்டயப்படிப்பு மற்றும் பட்டப் படிப்பு மாணவிகளுக்கு இணைய வழியிலான கருத்தரங்கை நடத்தி யது.
பெரியார் மருந்தியல் கல்லூரி யின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரையின் வழிகாட்டுதலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை இயக்குநர் முனைவர் த. சிறீவிஜய கிருபா வரவேற்புரையாற்றினார். Unicharm India--வின் CSR நிர்வாகி நித்யா சவுத்ரி பெண்கள் நலவாழ்வு காக் கப்படுதலில் சுய சுகாதாரம் பெரும் பங்கு வகிப்பதையும் மாதவிடாய் காலங்களில் பேண வேண்டிய சுய ஆரோக்கிய நடவடிக்கைகளையும் மாணவிகளிடம் விரிவாக எடுத் துரைத்தார்.
மருந்தியல் பட்டப்படிப்பின் நான்காமாண்டு மாணவி சண்முக பிரியா நன்றியுரையாற்றிய இந் நிகழ்ச்சியை பெரியார் நலவாழ்வு சங்கம் ஒருங்கிணைத்து நடத்தியது. மகளிர் சுய சுகாதாரம் குறித்து நடைபெற்ற இக்கருத்தரங்கில் 93 மாணவிகள் மற்றும் பேராசிரி யர்கள் கலந்து கொண்டு பயன டைந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment