பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசத்தில் கலைநிகழ்ச்சியில் ஜாதி ஆணவ வன்முறை வெறியாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 9, 2023

பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசத்தில் கலைநிகழ்ச்சியில் ஜாதி ஆணவ வன்முறை வெறியாட்டம்

பல்லியா, மார்ச் 9-  உத்தரப் பிரதேசத்தில் ஜாதியை போற்றும் வகையில் பாடல் பாட மறுத்த நடிகர் பவன் சிங் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். போஜ்புரி நடிகர் பவன் சிங் மற்றும் பாடகி ஷில்பி ராஜ் ஆகியோர் உத்தரப்பிரதேச மாநிலம் பல்லி யாவில் நடந்த தனியார் கச்சேரியில் கலந்து கொண்டனர். அப்போது இருவரும் திரைப்படப் பாடல்களை சேர்ந்து பாடினர்.  கூட்டத்தில் இருந்த சிலர், குறிப் பிட்ட ஜாதியினரை போற்றும் வகையிலான பாடலை பாடுமாறு கேட்டுக் கொண்டனர். அந்த குறிப்பிட்டப் பாடலை பாட பவன் சிங் மறுத்துவிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டத்தில் இருந்த சிலர் பவன் சிங்கை நோக்கி கற்களை வீசினர். அந்த கல் அவர் மீது பட்டதால் அவருக்கு லேசான காயம் ஏற்பட் டதாக கூறப்படுகிறது. 

திடீரென விழா மேடை வன்முறை களமாக மாறிய தால், விழா விற்கு  வந்தவர்கள் சிதறி யடித்து ஓட்டம் பிடித் தனர். அங்கு பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர், மேடை யில் இருந்து பிரபலங்களை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத் தனர். இந்நிகழ்வின் காட்சிப் பதிவு சமூக வலைதள ங்களில் பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

No comments:

Post a Comment