கருநாடக முதலமைச்சர் பதவி விலகுவாரா? ஊழலில் சிக்கிய பாஜக எம்.எல்.ஏ. பதவி விலகக் கோரி போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 5, 2023

கருநாடக முதலமைச்சர் பதவி விலகுவாரா? ஊழலில் சிக்கிய பாஜக எம்.எல்.ஏ. பதவி விலகக் கோரி போராட்டம்

பெங்களூரு, மார்ச் 5- கருநாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பதவி விலக வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மேனாள் முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருநாடகத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.  இந்த மாநிலத்தில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், காங்கிரஸ், பாஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், தாவணகெரெ மாவட்டம் சென்னகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர், மதல் விருபக்சப்பா லஞ்சப் புகாரில் சிக்கியுள்ளார்.  அவரது வீட்டில் கட்டுக் கட்டாக சுமார் 6 கோடி ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

கருநாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த நிகழ்வை அடுத்து விருபக்சப்பாவை கைது செய்ய வலியுறுத்தியும், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பதவி விலக வலியுறுத்தியும் கருநாடகாவில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதன் ஒருபகுதியாக பெங்களுருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, சித்தராமையா உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர், அவர்களை கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர். அதேபோல், மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment