முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக நீதியை முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறார் பாராட்டு விழாவில் அகிலேஷ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 3, 2023

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக நீதியை முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறார் பாராட்டு விழாவில் அகிலேஷ்

சென்னை,மார்ச் 3- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத் தில் 1.3.2023  அன்று   உத்தரப்பிரதேச மாநில மேனாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் தலை வருமாகிய அகிலேஷ் யாதவ் உரையாற்றுகையில்,

"தமிழ்நாட்டை சிறந்த மாநி லமாக மாற்றியுள்ளார் முதலமைச் சர் மு.க.ஸ்டாலின். 14 வயதில் கோபாலபுரத்தில் இளைஞர் அணியை தொடங்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 1976இல் அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்து போராடி சிறை சென்றவர் மு.க.ஸ்டாலின். ஸ்டாலின் ஒரு நாத்திகவாதியாக இருந்தாலும் எந்த மதத்திற்கும் எதிரானவர் அல்ல. சமத்துவம், சமூக நீதி குறித்த அவரது பார்வையை நான் பாராட் டுகிறேன். விவசாயிகளுக்கு துணை நின்றார் தமிழ்நாட்டின் வளர்ச் சிக்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மிகச் சிறப்பாக பணியாற்றி வரு கிறார். ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளுக்கு துணை நின்றவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். தமிழ்நாட்டில் முதல் வேளாண் பட்ஜெட் அவரது ஆட்சியில் வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வழிகாட்டுதலால் தமிழ்நாடு சிறப்பாக இருக்கிறது. கரோனா காலத்திலும் மக்களை நன்றாக பாதுகாத்து நோய் தொற்றை சரி யாக கையாண்டார். விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் உள்ளவர் மு.க. ஸ்டாலின். 

"உங்கள் தொகுதியில் முதல மைச்சர்" என்ற திட்டத்தின் மூலம் மக்களின் குறைகளைக் கேட்டு உடனக்குடன் தீர்வு காண்கிறார் முதலமைச்சர் மு.க.  ஸ்டாலின். மக் களைத் தேடி மருத்துவம் திட்டத் தின் மூலம் தமிழ்நாட்டு மக்கள் தங்களது வீடுகளில் இருந்தபடியே பயனடைந்து வருகின்றனர். பதவி யேற்ற ஒரு வருடத்திலேயே 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கியுள்ளது திமுக அரசு. இந்தியாவிற்கு எடுத்துக்காட்டாக சமூக நீதியை முன்னிறுத்தி செயல் பட்டு வருகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்." என்றார்.


No comments:

Post a Comment