தலைவாசல்,மார்ச்16- மாநிலப் பகுத்தறிவாளர் கழகப் பொருளா ளர் முனைவர் சி.தமிழ்செல்வன் தந்தையார் செ.சிதம்பரம் உடல் நலக் குறைவால், தலைவாசல் வட்டம், நாவக்குறிச்சி கிராமத்தில் 1.3.2023 அன்று மறைவுற்றார். அவரது படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி நாவக் குறிச்சியில் உள்ள அவரது இல்லத் தில் 11.3.2023 அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.
நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு பேராசிரியர் பழனிமுத்து (அரசு கலைக் கல்லூரி மேனாள் முதல்வர்) தலைமையேற்றார். செ. தமிழரசு அனைவரையும் வர வேற்று உரையாற்றினார்.
மறைந்த பெரியவர்
செ.சிதம்பரம் படத்தினை பேராசிரியர் பழனிமுத்து திறந்து வைத்து அவரின் கொள்கைப் பற்றினையும், பிள்ளைகளின் கல்வியில் அவருக்கிருந்த ஆர்வத் தையும் விளக்கினார்.
தனது தந்தையுடனான உணர் வினை, உருக்கத்துடன் விளக் கினார்.
அவரது நிறை வேறாத ஆசைகளை தனது கடமை களாக எண்ணி முடிப்பேன் என்று கூறினார்.
தந்தை பெரியார் பெண் கல்வியை எவ்வளவு முக்கியமாக கருதினாரோ அதைப்போன்றே தனது பிள்ளைகள் அனைவரும் கல்வியில் சிறப்பாக இருக்க வேண்டும் என அவர் விரும்பினார். திராவிட இயக்கத்தின்மீது அவ ருக்கு இருந்த பிடிப்பினை விளக் கினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உடனடியாக தொடர்பு கொண்டு தங்களுக்கு ஆறுதல் கூறியதையும் நினைவு கூர்ந்தார் .
பேராசிரியர் லதா தமிழ் செல்வன் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் அவருடனான தங்க ளது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
சென்னை மாவட்ட பகுத்தறி வாளர் கழக தலைவர் கோவி. கோபால், மாவட்ட செயலாளர் பா.இராமு ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் பொறி யாளர் இரவி அவர்கள் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment