ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடிய ஈ.வெ.கி.ச.இளங்கோவன், அவர் மகன் சஞ்சய் சம்பத் ஆகியோர் இன்று (3.3.2023) பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தனர்.
ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை அணிவித்து, புத்தகம் வழங்கி தேர்தல் வெற்றிக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.
தந்தை பெரியார், அன்னை மணியம்மையார். சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து ஈ.வெ.கி.ச. இளங்கோவன் மரியாதை செலுத்தினார்.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் சு.திருநாவுக்கரசர், காங்கிரஸ் கட்சிப் பொறுப்பாளர்கள் என்.ரெங்கபாஷ்யம், வி.ஆர்.சிவராமன், ஏ.ஜி.சிதம்பரம், க.வீரபாண்டியன், பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment