சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் முனைவர்
ந.க.மங்கள முருகேசன் மறைவுக்கு இரங்கல்
திராவிட இயக்க வரலாற்றுப் பேராசிரியர் முனைவர் ந.க.மங்கள முருகேசன் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.
திராவிட இயக்க வரலாற்றை ஆவணப்படுத்தும் பெரும்பணியில் மறைவுற்ற ந.க.மங்கள முருகேசன் அவர்களின் பங்களிப்பு அளப்பரியது.
தந்தை பெரியாரின் கொள்கைகளை தன் எழுத்துப் பணியின் வாயிலாக வரலாற்று ஆவணமாக்க அவர் ஆற்றிய பங்கு வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கக் கூடியது, அந்த பணியினை தொடர்ந்து செய்து முடிக்க ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு எப்போதும் உறு துணையாக இருந்தவர் நம்மிடமிருந்து விடைபெற்றார் என்ற செய்தி அதிர்ச்சியாகவும், துயரமாகவும் உள்ளது. அவரின் இந்த திடீர் இழப்பு திராவிட இயக்கத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்!
மறைவுற்ற திராவிட இயக்க வரலாற்றுப் பேராசிரியர் முனைவர் ந.க.மங்கள முருகேசன் அவர்களுக்கு வீரவணக்கம்.
- க.பூபாலன்,
பெரியார் சமூக சேவை மன்றம், சிங்கப்பூர்.
- - - - -
வரலாற்றுப் பேராசிரியர்
ந.க.மங்கள முருகேசனுக்கு இரங்கல்
கடந்த 17.3.2023 அன்று மறைந்த பகுத்தறிவுப் பேராசிரியர் ந.க.மங்கள முருகேசனின் மறைவிற்கு சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக மாவட்டத் தலைவர் இரா.புகழேந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். "பகுத்தறிவுப் பேராசிரியர் அவர்களுக்கு வீர வணக்கங்கள்" என தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment