சூரிய மின் பலகைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 23, 2023

சூரிய மின் பலகைகள்

நிலம் என்ற வளத்தை மறைத்துக்கொள்பவை சூரிய மின் பலகைகள். பகல் வெளிச்சத்தை மறைப்பதால், அதன் கீழே ஒன்றுமே செய்ய முடியாது என்பது தான் நிலைமை. அதை மாற்ற வருகிறது, பகுதி ஒளியை கீழே அனுப்பும் சூரிய மின் பலகைகள்.

அமெரிக்காவிலுள்ள, கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கும் பசுமைக் குடிலில், சூரிய ஒளியை பாதி எடுத்துக் கொண்டு மீதியை கீழே உள்ள செடிகளுக்கு அனுப்புகிறது. இதன் மூலம், செடிகள் முன்பை விட அதிக செழிப்பாக வளர்கின்றன என்பது தான் இதில் மிகவும் ஆச்சரி யப்படத்தக்க தகவல்.

கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சூரியப் பல கைகளை கரிமப் பொருட்களால் தயாரித்தனர். வளைந்து கொடுக்கும் தன்மை கொண்ட, அவை பாதியளவு வெளிச்சத்தை வெளியேற்றும். இதை பசுமைக் குடிலில் பயன்படுத்தியபோது, கணிசமான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடிந்தது. அதைவிட, கீழே குடிலில் இருந்த செடிகள் அடர்த்தியாக வளர்ந்தன. செடிகளுக்கு அத்தனை சூரிய ஒளி தேவைப்படுவதில்லை என்பதோடு, கெடுதல் செய்யவும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத் தக்கது. தற்போது இந்த நுட்பத்தை வர்த்தகமயமாக்க முயற்சிகள் நடக்கின்றன.

No comments:

Post a Comment