நாடாளுமன்ற கூட்டம் தொடக்கம் ஆன்லைன் சூதாட்டம்: விவாதிக்க திமுக மக்களவைத் தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 13, 2023

நாடாளுமன்ற கூட்டம் தொடக்கம் ஆன்லைன் சூதாட்டம்: விவாதிக்க திமுக மக்களவைத் தலைவர் டி.ஆர்.பாலு கடிதம்

புதுடில்லி, மார்ச் 13-  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆவது அமர்வு இன்று (13.3.2023) தொடங் கியது. இதில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது குறித்து மக்களவையில் விவாதிக்க கோரி திமுக சார்பில் தாக்கீது அளிக்கப்பட்டுள்ளது. நாடா ளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி 2023-_2024ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக் கையை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து இரு அவைக ளிலும் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும், பிரதமர் மோடியின் பதில் உரையும் இடம்பெற்றன.

அதானி குழும முறைகேடு புகார் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற கூட்டுக் குழு விசார ணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும் எதிர்க்கட்சி மக்களவை உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் நாடாளுமன்றத்தின் அலுவல்கள் பாதிக்கப்பட்டன. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பாதியின் அமர்வு கடந்த பிப். 13ஆம் தேதி முடிவுற்றது. தொடர்ந்து, முதல் பாதி அமர்வு நிறைவு பெறுவதாக அறிவித்து மார்ச் 13ஆம் தேதி வரை அவை நடவடிக் கைகள் ஒத்திவைப்பதாக அறிவிக்கப் பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் 35 மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட் டுள்ளது.

குறிப்பாகத் தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்களை நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே சிபிஅய், அமலாக்கத் துறை மூலம் எதிர்கட்சி தலைவர்களான லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ், மணீஷ் சிசோடியா குறிவைக்கப்படும் விவகாரம் தொடர்பாக நாடாளுமன் றத்தில் பிரச்சினை எழுப்ப எதிர்க் கட்சிகள் திட்ட மிட்டுள்ளன.

அதே நேரத்தில் அதானி விவகாரம் குறித்து பிரச்சினை எழுப்பப்படும். அதே நேரத்தில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிப்பது குறித்து மக்களவையில் விவாதிக்க திமுக தாக்கீது கொடுத் துள்ளது. தமிழ் நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களால் பணத்தை இழந்த வர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

பலர் தங்களது பணத்தை இழந்து, அதில் இருந்து மீளமுடியாமல் இது வரை 40 பேர் தற்கொலை செய்துள் ளனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசால் ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசர சட்டம் உருவாக்கப்பட்டு, அமைச்சரவை ஒப்பு தல் பெறப்பட்டது. பிறகு, இந்த அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்து சட்டம் அமலானது. இந்த சட்டப்படி, தமிழ்நாட்டில் பணத்தையோ, வேறு ஏதேனும் பொருளையோ வைத்து, ஆன்லைன் மூலம் நடைபெறும் சூதாட்டங்கள், விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப் படுகிறது. பணம் வைத்து ஆன்லைன் சூதாட்டம், ஆன்லைன் விளையாட்டு விளையாடினால் 3 மாதம் வரை சிறை அல்லது ரூ.5 ஆயிரம் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் தண்ட னையாக விதிக்கப்படும்.  இதையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவை குளிர்கால கூட்ட தொடரில், ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டத்துக்கு மாற்றாக, சட்ட மசோதாவை அமைச் சர் எஸ்.ரகுபதி அக்டோபர் 19ஆம் தேதி தாக்கல் செய்தார்.

அந்த சட்ட மசோதா நிறை வேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டது. இதையடுத்து, அந்த மசோதா வில் பல்வேறு விளக்கங்களை ஆளுநர் கோரியிருந்தார். அதற்கு, 24 மணி நேரத்தில் விளக்கங்களை தமிழ்நாடு அரசு அளித்தது. பிறகு, மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கடந்த டிசம்பர் 2ஆம் தேதி ஆளுநரை சந்தித்து, வலியுறுத்தினார்.

சட்டம் இயற்றி அனுப்பி 4 மாதங்கள் ஆன பிறகும், அதன் மீது ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்காமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப் பினார். 

ஆளுநரின் இந்த நடவடிக் கைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆன்லைன் சூதாட் டத்தால் ஏற்படும் உயிரிழப்பு களுக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும் என்றும் தலைவர்கள் வலியுறுத் தியிருந்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் கடந்த 9ஆம் தேதி நடந்தது. 

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியால் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா திருப்பி அனுப்பியது குறித்து விவாதிக்கப் பட்டது.

ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாவை, சட்டப்பேரவை கூடும் போது மீண்டும் நிறைவேற்றி மீண்டும் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைப் பது என முடிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில், ஆன்லைன் சூதாட் டத்துக்கு தடை விதிப்பது குறித்து நாடாளுமன்ற மக்களவையில் இன்று விவாதிக்கக்கோரி திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, மக்களவை செயலாளருக்கு நேற்று (12.3.2023) தாக்கீது அனுப்பினார்.

அதில் ‘தமிழ் நாட்டில் 40க்கும் மேற்பட்டோர், ஆன்லைன் ரம்மியால் உயிர் இழந் துள்ளனர். இது குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும். ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்’’ என வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment