நாகர்கோவில் மார்ச் 2 இரணியல் அருகே அம்மன் கோவிலில் தங்கநகைகளை கொள்ளை யடித்து சென்றவர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
கன்னியாகுமரியில் திங்கள்சந்தை இரணியல் அருகே அம்மன் கோவிலில் தங்கநகைகளை கொள்ளையடித்து சென்றவர்களை காவல் துறையினர் தேடி வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கோவில்களில் தொடர்ச்சியாக கொள்ளை நடந்து வருகிறது. இந்த நிலையில் திங்கள் சந்தை அருகே சுனைமலையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் கொள்ளை நடந்துள்ளது. இந்த கோவில் பூசாரியான செந்தில் கடந்த 24-ஆம் தேதி இரவு பூஜைகளை முடித்து விட்டு கோவில் நடையை சாத்திவிட்டு சென்றார்.
மறுநாள் காலையில் கோவிலை திறக்க பூசாரி செந்தில் வந்தார். அப்போது கோவில் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுகுறித்து கோவில் தலைவர் ராமசாமிக்கு தகவல் தெரிவித்தார். அவர் வந்து பார்த்தபோது அம்மன் சிலையில் இருந்த 6 கிராம் எடையுள்ள தங்க சங்கிலி மற்றும் 2.5 கிராம் எடையுள்ள தாலி சுட்டியையும் காணவில்லை. யாரோ கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இதுபற்றி ராமசாமி இரணியல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இந்த கொள்ளை தொடர்பாக காவலர்கள் விசாரணை நடத்தி, கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
No comments:
Post a Comment