பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்களுக்கு இன்று 72ஆம் ஆண்டு பிறந்த நாள் (1.3.2023). தமிழர் தலைவர் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
வாழ்த்துச் செய்தி வருமாறு:
"சமூக நீதியினைக் காத்திடவும், ஒடுக்கப்பட்ட மக்கள் ஏற்றம் பெற்றிடவும், நீங்கள் நீண்ட நாள்கள் வாழ்ந்து சமுதாயப் பணி ஆற்றிட வேண்டும். சமூகநீதி நோக்கப் பயணம் வலுப்பட, நாடு தழுவிய அளவில் ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகளின் கூட்டணி அமைந்திட தாங்கள் முயற்சி எடுத்திட வேண்டும். பீகார் மாநில மக்களின் நலனுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் தங்களது பணி பயன்பட நீடூழி வாழ்க!"
இவ்வாறு தமிழர் தலைவர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment