5.3.2023
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
👉 வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்புபவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
👉புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியவரை பிடிக்க தனிப்படை காவல்துறை டில்லி விரைந்தது. பாஜக நிர்வாகி பிரசாந்த் உமாராவை கைது செய்ய 7 பேர் கொண்ட தனிப்படை டில்லி விரைந்தது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
👉அதானி குழுமத்திற்கு மோடி அரசு 'ஏகபோகங் களை' வழங்கி, மக்களை சுரண்ட அனுமதிப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
தி இந்து:
👉 மதம் மாறியவர்களுக்கு தாழ்த்தப்பட்டோர் தகுதி வழங்க ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து பாலகிருஷ்ணன் ஆணையத்திடம் அறிக்கை அளித்தது
👉தருமபுரியைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளர்கள் தினசரி மனிதக் கழிவுகளை எடுக்கிறார்கள் - இது நிர்வாக சீர்கேடு மற்றும் ஜாதியச் சார்புகளைக் கொண்ட மனிதாபிமானமற்ற வேலை; நிர்வாகம் நாள் தோறும் தங்களை எப்படி நடத்துகிறது, உரிமைகளை வெளிப்படுத்துவது ஏன் கீழ்ப்படியாமை என்று தொழிலாளர்கள் பேசுகிறார்கள் என்பதை கட்டுரை யாளர் சிறீவித்யா விவரித்துள்ளார்.
தி டெலிகிராப்:
👉 பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் - வளாகத்தில் பொது இடங்களில் ஹோலி கொண்டாட தடை விதித்துள்ளது, மேலும் இந்த உத்தரவை மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment