பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பெரியார் கலைவிழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 5, 2023

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பெரியார் கலைவிழா

வல்லம், மார்ச் 5- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) பெரியார் கலை விழா நடை பெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு உயிரி தொழில்நுட்பத் துறை மாணவியும் -மாணவர் பேரவைத் தலைவருமான டி.சாருமதி வரவேற்புரை நிகழ்த்தினார்.

பல்கலைக் கழகத் துணை வேந்தர் பேரா.செ.வேலுசாமி தலைமையுரையாற்றுகையில் இயல், இசை, நாடகம் ஆகியவற்றில் வரலாற்று சிறப்புமிக்க மாவட்டமாக நமது தஞ்சாவூர் சிறந்து விளங்குகிறது என்றும், மேலும் மாணவர்கள் தங்களுடைய ஆளுமை திறமைகளை வெளிக்கொணர்வதற்காக நடத்தப்படும் கலை விழாவாகும் இது எனவும் கூறினார். 

இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக பதிவாளர் பூ.கு.சிறீவித்யா உரையாற்றும் போது இவ்விழா மாணவர்கள் படிப்பில் மட்டுமல்லாது அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் கலைவிழாவாகும் என்று கூறி வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளை கூறினார். 

இந்நிகழ்ச்சியில் அறிவன் கலைக்கூடம் நிர்வாக இயக்குநர்,  அறிவழகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போது "எல்லா கல்வி நிறுவனங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் கலைவிழா நடத்தப்படுகிறது. கல்வியை மட்டும் போதித்தால் மாணவர்களுக்கு போதாது. மாணவர்களின் பல திறமைகளை வெளிக்கொணருவதற்கு கலைவிழாவாக நடத்தப்படுகிறது. மாணவர்களுக்கு ஏராளமான  வேலைவாய்ப்புகள் உள்ளது. அதற்கான திறமைகளையும், தகுதிகளையும், பொது அறிவையும் தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.  ஒரு கல்வி நிறுவனத்தில் படிப்பு அறிவை மட்டும் சொல்லிக்கொடுக்காமல் மாணவனின் இலக்கை தீர்மாணிக்க அவனுக்கு வழிவகுக்க வேண்டும். அருணிமா சின்கா என்பவர் எவெரஸ்ட் சிகரத்தில் ஏறி இந்திய தேசியை கொடியினை ஏற்றி வந்தவர்.  அருணிமா சின்காவின் வாழ்க்கை வரலாற்றை கூறி, அவர் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார் என்பதனையும், அவருடைய எவெரஸ்ட் சிகரத்தை அடையவேண்டும் என்ற முயற்சியை பற்றியும் எடுத்துரைத்தார். 

மேலும் இந்நிகழ்ச்சியில் தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம் வல்லம்  மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். 

இறுதியாக பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்ப துறை மாணவி மாணவர் பேரவைச் செயலாளர் லாலன் கிரேசியஸ் நன்றியுரையாற்றினார்.

இதனை அடுத்து கலை நிகழ்ச்சி நடைபெற்றது.  

No comments:

Post a Comment