புதுடில்லி, மார்ச் 21- “ஜம்மு-காஷ்மீ ரில் பாதுகாப்பு பெருமளவில் மேம்பட்டுள்ளதாக கூறப் பட் டாலும், கிரண் படேல் விவ காரத்தில் இவ்வளவு பெரிய மீறல் எப்படி ஏற்பட்டது? இந் தியாவின் பாதுகாப்பு நலன் கருதி இதற்கு மோடி அரசு பதி லளிக்க வேண்டும்” என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத் தியுள்ளார்.
பாஜக ஆளும் குஜராத்தைச் சேர்ந்தவர் கிரண் பாய் படேல். இவர் பிரதமர் அலுவலகத்தின், பிரச்சாரத்துறை கூடுதல் இயக்கு நர் எனக் கூறி, ஜம்மு-காஷ்மீர் தலைநகர் சிறீநகரில் சகல அரசு சலுகைகளையும், துணை ராணுவப்படை வீரர் கள், ஜம்மு-காஷ்மீர் காவல் துறையினரின் பாதுகாப்பு புடை சூழ, இசட் பிளஸ் பாது காப்புடன், புல்லட் புரூப் (குண்டு துளைக்காத) மகேந் திரா ஸ்கார்பியோ காரில் பல் வேறு இடங்களுக்கு சென்றுள் ளார். மேலும் சிறீநகரில் இசட் பிளஸ் பாதுகாப்புடனேயே பல்வேறு ஆலோசனைக் கூட் டங்களையும் நடத்தியுள் ளார்.
பிரதமர் அலுவலக அதி காரி என்ற அடை யாளத்துடன் சமூக வலைத்தள கணக்குகளை யும் தொடங்கி டிப் டாப் ஆக பல ஒளிப்படங்களையும் பதி வேற்றியுள்ளார். ‘வெரிபைடு டுவிட்டர்’ கணக்கு வைத்திருந்த படேலை டுவிட்டரிலும் ஆயி ரக்கணக்கானோர் பின்பற்றி வந்துள்ளனர்.
ஆட்சியர் மூலம் சிக்கிய கிரண் படேல்
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் சிறீநகருக்கு தனது முதல் பயணத்தின் போது அரசு செலவில் 5 நட்சத்திர ஓட்டலில் தங்கி விட்டு பாது காப்பு வீரர்கள் புடை சூழ சுற்றிய படேல், காஷ்மீரின் தூத்பத்ரியை மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாற்றுவதற்கு முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்து அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோச னைக் கூட்டம் கூட போட்டு உள்ளார். மீண்டும் ஜனவரி மாதத்தில் சிறீநகருக்கு வந்துள் ளார். சம்பவ இடத்தில் இருந்த சிறீநகர் மாவட்ட ஆட்சியருக்கு சந்தேகம் ஏற்பட்டு, பிரதமர் அலுவலகத்தின் மூத்த பாது காப்பு அதி காரி குறித்து காவல் துறையினரிடம் விசாரித்துள் ளார். காவல்துறையினர் உள வுத்துறை அதிகாரிகளுக்கும், பிரதமர் அலுவலகத்திற்கும் தகவல் அனுப்பி கிரண் படேல் குறித்து விசாரித்துள்ளனர். கிரண் படேல் என்பவர் பிரத மர் அலுவலக அதிகாரி இல்லை எனவும், அவர் ஒரு மோசடி நபர் என உளவுத் துறை அதிகாரிகள் கூற, இந்த விவ காரத்தை ரகசியமாக வைத்திருந்த சிறீநகர் காவல் துறையினர், 3ஆவது முறையாக மீண்டும் சிறீநகர் வந்த கிரண் பாய் படேலை அவர் தங்கி யிருந்த ஓட்டலில் வைத்து கைது செய்துள்ளனர். கடந்த 10 தினங்களுக்கு முன்பே இந்த கைது நடவடிக்கை எடுக்கப் பட்டு இருந்தாலும், நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தி காவல்துறையினர் சிறையில் அடைத்த பிறகே இப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றது என பொது வெளியில் தெரியவந்துள்ளது.
பாஜக பொதுச்செயலாளருக்கு தொடர்பு?
இந்நிலையில், குஜராத் மாநில பாஜக பொதுச்செயலா ளர் பிரதீப் சிங் வஹேலாவு டன் கிரண் பாய் படேல் தொடர்பு வைத்த தாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஆதாரமாக பிரதீப் சிங், கிரண் பாய் படேலின் டுவிட்டர் செய் திகளை அதிகளவில் டேக் செய்வது உள்ளிட்ட வேலை களில் ஈடுபட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச் சூரி தனது டுவிட்டர் பக்கத்தில், “ஜம்மு-காஷ்மீரில் என்ன நடக்கிறது? பாதுகாப்பு பெரு மளவில் மேம்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் நாளுக்கு நாள் இடி முழங்கக் கூறுகிறார். பிறகு எப்படி இவ் வளவு பெரிய மீறல் ஏற்பட்டது? இந்தியாவின் பாதுகாப்பு நலன் கருதி இதற்கு மோடி அரசு பதி லளிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment