புதுடில்லி, மார்ச் 7- தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்மீது தாக்குதல் என்றும், அத்தாக்குதலில் வடமாநிலத்தவர்கள் 12 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் உண்மைக்கு மாறாக திரிக்கப்பட்ட காட்சிப்பதிவுடன் சமூக வலைத்தளத்தில் பாஜகவினரால் திட்டமிட்டு பரப்பப்பட்டது. தமிழ்நாடு அரசு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, பொய்யான தகவலைப்பரப்பி அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் நடக்காத ஒன்றை நடந்ததாக சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவு-பகிர்வு செய்தவரான பிரசாந்த் உம்ராவ் எனும் பாஜக பொறுப் பாளர் தற்பொழுது இவ்வழக்கில் பிணைகோரிய மனு வில், பொய்ச் செய்திக்கு நான் பலிகடா ஆகிவிட்டேன் என தனது முன்பிணை கோரிய மனுவில் பிரசாந்த் உம்ராவ் கூறியுள்ளார். டில்லியைச் சேர்ந்த வழக்குரைஞர் உம்ராவ், கோவா பாஜக அரசின் வழக்குரைஞராக உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார்.
பொய்ச் செய்திக்கு தான் பலிகடா ஆகிவிட்டதாகவும், வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு பரப்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
இப்படி உண்மைக்கு மாறான தகவல்களை, அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் பாஜகவினர் நாடு முழுவதும் பரப்பி வருகின்றனர் என்பதற்கு சான்றாக அவருடைய முன்பிணைகோரிய மனுவின்மூலம் நிரூபணமாகியுள்ளது.
No comments:
Post a Comment