செங்கல்பட்டு, மார்ச் 2- செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் கலந்துரையாடல் கூட்டம் 26..2.2023 ஞாயிறு மாலை 4 மணி அளவில் நடைபெற்றது.
மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சிவக்குமார் தலைமையில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் மு.பிச்சைமுத்து வரவேற்றார்.
செங்கல்பட்டு மாவட்ட திரா விடர் கழக தலைவர் செங்கை சுந்தரம் செங்கல்பட்டு மாவட்ட கழக அமைப்பாளர் பொன். ராஜேந்திரன் கழக பொதுக்குழு உறுப்பினர் அ.பா. கருணாகரன் மறைமலை நகர் கழக தலைவர் திருக்குறள் வெங்கடேசன் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் செ.வினோத் ஆகியோர் முன்னிலையில் மாநில பகுத்தறி வாளர் கழக துணைத் தலைவர் கரிகாலன் இணையதளங்களில் மூடநம்பிக்கை, ஜாதி வெறி, மதவெறி கருத்துக்களுக்கு எதிராக தோழர்கள் உடனடியாக பதிவிட்டு தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக் கலாம் என்று கருத்துரை வழங்கினார்.
மாநில பகுத்தறிவாளர் கழக செயலாளர் ஆ. வெங்கடேசன் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்து கருத்துரை வழங்கினார்
மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்துவது மற்றும் பகுத்தறி வாளர்கள் கழகத்தின் பணிகள் குறித்தும் சிறப்புரை ஆற்றினார் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் சே.சகாயராஜ் மாநில தலைவருக்கு பயனாடை அணி வித்து மரியாதை செலுத்தி நன்றி யுரை ஆற்றினார்.
No comments:
Post a Comment