பள்ளிக் கல்வித் துறையின் பார்வைக்கு... மாணவிகளைக் கோவிலுக்கு அழைத்துச் சென்ற அவலம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 17, 2023

பள்ளிக் கல்வித் துறையின் பார்வைக்கு... மாணவிகளைக் கோவிலுக்கு அழைத்துச் சென்ற அவலம்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் மாணவியரில் பொதுத் தேர்வெழுதக் காத்திருக்கும் மாணவி யரைத்தான் இப்படி அழைத்துச் சென்றிருக் கிறார்கள்.

ஒவ்வொருவருக்கும் கடவுளர் நம்பிக்கை என்பது வேறு, மத நம்பிக்கை என்பது வேறு. ஆனால் தேர்வெழுத இருக்கும் மாணவியர் களை அவர்களது ஹால்டிக்கெட்டைக் கொண்டுபோய் கடவுளர் சிலைக்கு முன் வைத்து வணங்கி வந்தால்தான் தேர்வில் வெற்றிபெற இயலும் என்ற நிலைக்கு அறந் தாங்கி அரசுப் பள்ளியில் பயிலும் மாண வியர்களை கோயிலுக்கு அழைத்துச் செல்லும் அவல நிலைக்கு அந்தப் பள்ளியில் பயிலும் ஆசிரியர்கள் தள்ளப் பட்டுள்ளார்கள். இந்தச் செயல் அந்தப் பள்ளியையும் பள்ளியில் பணி புரிந்து மாணவ மாணவியருக்கு பாடம் நடத் தும் ஆசிரியர்கள் மீதுள்ள நம்பிக்கையையும் குறைக்கும் விதமாக உள்ளது.

கடந்த 12.3.2023 அன்று பகலில் நடந்த இந்த வழிபாட்டுக்காக பள்ளியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வீரமாகாளி யம்மன் கோவிலுக்கு காலில் செருப்புக்கூட அணியாமல் நடக்கச் செய்து, அழைத்துச் சென்றிருக்கிறார்கள் ஆசிரியர்கள். அதிலும் இயற்கை உபாதைக்கு ஆளான மாணவியரை கோவிலுக்கு வெளியில் நிற்க வைத்து வழிபட வைத்த கொடுமையும் நடந்திருக்கிறது.

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அது பள்ளியின் தலைமை யாசிரியர் விருப்பத்திற்காகச் செய்வது, அனைத்துப் பேரையும் தேர்வில் வெற்றிபெற வைப்பதற்காகச் செய்யும் வழிபாடுதான் என்றாலும் தலைமையாசிரியரிடம் எடுத்துச் சொல்கிறேன் என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில், தேர்வு எழுத முடியாது என்றால் அந்த ஆசிரியர்கள் இதுவரை என்ன பாடம் நடத்தினார்கள், எப்படி பாடம் நடத்தினார்கள், அவர்களுக்கு ஏன் தண்டமாக ஊதியம் என்ற கேள்வி யெல்லாம் எழுகிறது.

இந்தச் செயலுக்கு குறிப்பிட்ட அந்த ஆசிரியர்கள் மீது பள்ளிக் கல்வித்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மாணவியர்களில் பல மத நம்பிக்கை யாளர்களும், மத நம்பிக்கையற்றவர்களும் இருப்பார்கள். இந்த நிலையில், குறிப்பிட்ட ஒரு கோவிலுக்கு மாணவியரை அழைத்துச் செல்வது முறையானதுதானா?

No comments:

Post a Comment