மம்தா உறுதி
கொல்கத்தா, மார்ச் 20-- பொது சிவில் சட்டத்தை நாங் கள் ஏற்கவில்லை, அதை செயல்படுத்த அனும திக்க மாட்டோம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் அரசாங் கம் நடைபெற்று வருகி றது. அம்மாநிலத்தில் முர் ஷிதாபாத் மாவட்டத் தில் திரிணாமுல் காங்கிரஸின் உட்கட்சி கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அந்த கட்சியின் தலைவி மம்தா பேசு கையில் கூறியதாவது:
ராகுல் காந்தியை தலைவராக வைத்திருக்க பா.ஜ.க. விரும்புகிறது.பிரதமர் நரேந்திர மோடியின் மிகப்பெரிய டி.ஆர்.பி. ராகுல் காந்தி. அவர் (ராகுல் காந்தி) எதிர்க்கட்சியின் முக மாக இருந்தால், பிரதமர் மோடியை யாராலும் விமர்சிக்க முடியாது. மற்றபடி, வெளிநாட்டில் யாரோ ஏதோ சொல்லி விட்டு, அது குறித்து இங்கு சலசலப்பு நடப்பதை யாராவது பார்த்த துண்டா?. நாடாளுமன் றம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும், அதானி விவகாரம் மற்றும் எல்.அய்.சி. விவ காரம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட வேண்டும்.ஆனால், அதானி விவகாரத்தில் பேச்சு வார்த்தை நடக்கா மல் இருப்பது ஏன்? எல்.அய்.சி. குறித்து ஏன் பேச்சு வார்த்தை நடக்க வில்லை? எரிவாயு விலை பற்றி விவாதிக்காதது ஏன்?. இதற்கிடையில் பொது சிவில் சட்டம் அறிமுகப்படுத்தப்பட் டுள்ளது. பொதுசிவில் சட்டத்தை நாங்கள் ஏற்கவில்லை, அதை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment