சென்னை வடபழனி தனியார் மருத்துவ மனை வளாகத்தில், தேசிய அளவிலான ‘பேரிடர் மருத்துவம்' என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி கருத்தரங்கம் நடை பெற்றது.
விஜயா மருத்துவக் குழுமம், இந்திய மருத் துவச் சங்கம் இணைந்து மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் இம்மருத்துவக் கருத்தரங்ககை நடத்தியது. இக்கருத்தரங்கத்தை கேரள உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி எஸ்.மணிக் குமார் தொடங்கி வைத்து பேசுகையில்:
பேரிடர் காலங்களில் நோயாளிகளை மீட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து ஒன்றிய மாநில பேரிடர் குழு இணைந்து பயிற்சி வழங்குவது மருத்துவர் களுக்கு நிச்சயம் உதவும், எதிர்பாராத பேரிடர் காலங்களிலும் மருத்துவம் மற்றும் சுகாதார சேவையை தொடர்ந்து வழங்க தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார்.
இக்கருத்தரங்கில் விஜயா மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர் பி.பாரதிரெட்டி, பேராசிரியர் டி.சாமுவேல் மற்றும் பல்வேறு மருத்துவ மனைகளின் மருத்துவர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment