மதுரை, மார்ச் 9- பேராசிரியர் அருணன் எழுதியுள்ள “ஞானக் கோலங்கள் 200” கவிதை நூல் வெளியீட்டு விழா நாளை 10-3-2023 வெள்ளியன்று மாலை 6 மணிக்கு மதுரை கலைஞர் கருணாநிதி நகர் நீதிபதி கிருஷ்ணய்யர் அரங்கத்தில் நடை பெறவுள்ளது.
விழாவிற்கு தமுஎகச மாநில துணைச் செயலாளர் சிறீரசா தலைமையேற்க, மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் மீ.லெனின் வரவேற்புரையாற்றுகிறார். செம்மலர் ஆசிரியர் ச.தமிழ்ச்செல்வன் நூலை வெளியிட, தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் பெற்றுக்கொள்கிறார்.தமுஎகச மதிப்புறு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்க டேசன் சிறப்புரை நிகழ்த்துகிறார்.
நூலாசிரியர் பேராசிரியர் அருணன் ஏற்புரை நிகழ்த்துகிறார்.
தமுஎகச மதுரை மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அம்பிகா பழனி வேல் நன்றி கூறுகிறார். தமுஎகச மதுரை மாநகர்-புறநகர் மாவட்டக்குழுக்கள் விழாவை ஏற்பாடு செய்துள்ளன.ரூ.300 விலை யுள்ள நூல், விழா அரங்கில் ரூ.200-க்கு கிடைக்கும் என வசந்தம் வெளியீட்டகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment