புதுடில்லி, மார்ச் 30- உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் பகுதி 1, பகுதி 2 தேர்வுகளை எழுத வாய்ப்பு வழங் கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடுமையான போர் ஏற்பட்ட நிலையில் அங்கு மருத்துவப் படிப்பை மேற்கொள்வ தற்காக சென்ற சுமார் 20,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் போர் காரணமாக நாடு திரும் பினர். உக்ரைனில் இருந்து திரும் பிய இந்திய மாணவர்கள் தாங்கள் மருத்துவக் கல்வியை இந்தியாவில் நிறைவு செய்ய அனுமதி அளிக்கு மாறு கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் நாடு திரும்பிய மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில் உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் மருத்துவக் கல்வியை இந்தியாவில் நிறைவு செய்ய அனு மதி அளிக்குமாறு கோரிக்கை வைத்திருந்தனர். மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கக்கூடாது, தங் கள் கல்வியை சொந்த நாட்டிலேயே தொடர வழிவகை செய்ய வேண் டும் என ஒன்றிய அரசுக்கு பல தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு, உச்சநீதிமன்றத்தில் வழக்குகளும் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, உக்ரை னில் இருந்து திரும்பிய மாணவர் கள் இந்திய பல்கலைக்கழகங்களில் கல்வியை தொடர முடியாது என்று ஒன்றிய அரசு தகவல் தெரிவித்திருந்தது.
இதையடுத்து மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் உக்ரைனில் படித்து இந்தியாவில் எந்த மருத்துவக் கல்லூரியிலும் சேராமல் இருக்கும் மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பை வழங்குவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தற்பொழுது உக்ரை னிலிருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் பகுதி 1, 2 தேர்வுகளை இந்தியாவில் எழுத வாய்ப்பளிப் பதாக என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்த தேர்வு எழுதக் கூடிய மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட் டுள்ளது.
அதில் தேர்வு எழுதக்கூட மாணவர்கள் 2 ஆண்டுகள் அரசு துறை சேவையில் இருக்க வேண் டும் என்றும் இந்திய மருத்துவப் பாடத்திட்டத்தின்படிதான் அமையும் என்று கூறப்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் தொடர்பான வழக் கில் உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு இத்தகவலைத் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment