ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்
ஜெய்ப்பூர், மார்ச் 24 நாங்கள் காந்தி, நாங்கள் சாவர்க்கர் அல்ல, இனி மோடிக்கும் அவரது அரசாங்கத்திற்கும் பயப்படமாட்டோம் என்று ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதசரா தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டு அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை சூரத் நீதிமன்றம் விதித்தது. இது தொடர்பாக ஒன்றிய பா.ஜ.க. அரசை காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதசரா கூறியதாவது: முழு நாடும் பார்த்துக் கொண்டிருக்கிறது, ராகுல் காந்தி எப்போதும் அதையே தான் சொல்வார், நாங்கள் காந்தி, நாங்கள் சாவர்க்கர் அல்ல, இனி மோடிக்கும் அவரது அரசாங்கத்திற்கும் பயப்பட மாட்டோம். காந்தி வரையிலான காங்கிரஸின் வரலாறு சிக்கனமும் தியாகமும் கொண்டது. நீதித்துறை மற்றும் சட்ட உரிமைகள் மீது அவர்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. சூரத் நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் ராகுல் காந்திக்கும் அவரது சித்தாந்தத்துக்கும் ஆதரவாக நிற்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment