சென்னை, மார்ச் 13- 2016ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடைபெற்ற தேர்தல் பிரச் சாரக் கூட்டத்தில் திமுக சார் பில் தளபதி மு.க.ஸ்டாலின் செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக் கப்படும் என வாக் குறுதி அளித்து இருந்தார்.
இதை வலியுறுத்தி அது தொடர்பான கோரிக்கை மனுவை செய்யாறு கழக மாவட்டத் தலைவர்
அ.இளங்கோ, செய்யாறு நகர கழகத் தலைவர் தி.காமராஜ், திருவத்திபுரம் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கே.இ.இராமலிங்கம், எ.வி.இராம நாதன், மற்றும் எ.பரணிராஜன், வி.ரவி, சதீஷ்குமார், பத்திரிகை யாளர்கள் பி.நடராஜன், டி.சால மன் மற்றும் பி.சபிபுல்லா, சங்கர் ஆகியோர் திராவிடர் கழகத் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை 10.3.2023 அன்று சந்தித்து நேரில் கொடுத்து வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment