வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிய பிஜேபி காங்கிரஸ் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 18, 2023

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிய பிஜேபி காங்கிரஸ் குற்றச்சாட்டு

பெங்களூரு, மார்ச் 18- வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை பா.ஜனதா ஏமாற்றியதாக கருநாடக மாநில காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.  கருநாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கருநாடக சட்டமன்றத்திற்கு கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது பா.ஜனதா 600 வாக்குறுதி களை கொடுத்தது. அதில் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதன் மூலம் மக்களை பா.ஜனதா ஏமாற்றிவிட்டது. பா.ஜனதாவின் பொய் உறுதிமொழி களினால் மக்களை ஏமாற்றிய குற்ற மனப்பான்மை பா.ஜனதாவுக்கு உள்ளது. கட்சித் தொண்டர்கள் போராட் டத்தால் எடியூரப்பா, சி.டி.ரவி ஆகியோர் சிக்கமகளூ ருவில் கூட்டத்தில் பங்கேற்காமல் திரும்பியுள்ளனர். முதல்-அமைச்சர் பதவி என்பது ஆணவம், அகங் காரத்தை காட்டும் பதவி அல்ல. மக்களின் கஷ்டங்களை தீர்க்கும் உயர்ந்த பதவி. ஒரு பெண் உதவி கேட்டு முதல்-அமைச்சரை அணுக முயற்சி செய்துள்ளார். ஆனால், அவரை சந்திக்காமல் உதாசீனப்படுத்திவிட்டு சென்று உள்ளார். அவர் சாமானிய மக்களின் முதல்-அமைச்சர் அல்ல, குறைந்தபட்ச பொது அறிவு கூட இல்லாத முதல்-அமைச்சராக பசவராஜ் பொம்மை உள்ளார். இவ்வாறு காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

குளிர்சாதன குடோனின் கூரை 

இடிந்து விழுந்து விபத்து- 11 பேர் பலி

லக்னோ மார்ச் 18- உத்தரப் பிரதேசம் மாநிலம், சம்பலின் சந்தவுசி பகுதியில் உள்ள உருளைக்கிழங்கு பதப்படுத்தும் குளிர்சாதன கிடங்கின் மேற்கூரை இடிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த காவல்துறையினர், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை குழுவினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். 

இந்த சம்பவத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அவர்களை அதிகாரிகள் மோப்ப நாய்களை பயன்படுத்தி தேடி வருவதாக தெரிவித்தனர். மேலும் கிடங்கின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் சம்பல் சக்ரேஷ் மிஸ்ரா கூறியுள்ளார். .விபத்து தொடர்பாக 4 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும், தலை மறைவான முக்கிய குற்றவாளியை தேடி வருவதாகவும் தெரிவித்தனர். 

இடிபாடுகள் அகற்றப்பட்ட பின்னரே கட்டடம் இடிந்து விழுந்ததற்கான உண்மையான காரணத்தை கூற முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment