காட்டுத் தீயை சாதாரணமாக எடைபோட்டு விடாதீர்கள். தொடர்ந்து பரந்து எரியும் காட்டுத் தீயால் பூமியை போர்த்தியுள்ள ஓசோன் படலத்தில் ஓட்டை விழுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 'நேச்சர்' இதழில் வெளியாகியுள்ள ஆய்வின்படி, ஆஸ்திரேலியாவில் 2019-2020ஆம் ஆண்டில் அடுத்தடுத்து ஏற்பட்டு பல நாட்கள் எரிந்த காட்டுத் தீ நிகழ்வுகளால் பெரும் புகை, காற்று மண்டலத்தை எட்டியது.
இதனால் ஏற்பட்ட வேதிவினையால், ஓசோன் படலம் பாதிக்கப்பட்டு, துளை ஏற்படுகிறது. பருவ நிலை மாற்றத்தால் தான், முன்பைவிட, காட்டுத் தீ நிகழ்வுகள் அதிகரித்திருப்பதாக சூழலியல் வல்லுநர் கள் கணித்துள்ளனர். இப்போது, அதே காட்டுத் தீயால், மேலும் பருவநிலை மாற்றம் நேரும் வகையில், ஓசோன் படலத்தில் பொத்தல் விழுவது சூழலியல் வல்லுநர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment