ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக தெலங்கானா அரசு வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 4, 2023

ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக தெலங்கானா அரசு வழக்கு

அய்தராபாத், மார்ச் 4 . தெலங்கானா ஆளு நர் தமிழிசை சவுந்தரராஜன், மசோ தாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில்  தெலங் கானா அரசு, ரிட் மனு தாக்கல் செய்து உள்ளது. 

இதுதொடர்பாக தெலங்கானா தலைமைச் செயலர் ஏ.சாந்திகுமார் தாக்கல் செய்துள்ள மனுவில், தெலங் கானா முனிசிபல் திருத்த மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்கள், கடந்த ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதியில் இருந்து ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். ஆளுநர் சுயமாக செயல்படக்கூடாது என்பதை ஷம்சீர் சிங் வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல்சாசன அமர்வு தெளிவுப்படுத்தியுள்ளது என்றும், மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைக்கும்போது, அதற்கு அவர் மறுப்பு கூற முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, ஆளுநரின் செயல்பாட்டை சட்ட விரோதமான, அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமைகளுக்கு எதிரான செயல் என அறிவித்து, நிலுவையிலுள்ள மசோ தாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் தர ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவித்து உள்ளார். இந்த மனு விரைவில் விசா ரணைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.


No comments:

Post a Comment