ப.மாணிக்கம் நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 5, 2023

ப.மாணிக்கம் நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை

 பொதுவாழ்வுக்கு எடுத்துக்காட்டான மாமனிதர் ப.மாணிக்கம்

மத - ஜாதி வெறித் தீயை அணைக்கும் தீயணைப்புப்

படை வீரர்களாக ஒன்றிணைந்து செயல்படுவோம்!

தோழர் மாணிக்கம் நூற்றாண்டு விழாவை எடுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பாராட்டு!



சென்னை, மார்ச் 5 பொதுவாழ்வின் எடுத்துக்காட்டாக ஒளிவீசிய தோழர் ப.மாணிக்கம் அவர்களின் நூற்றாண்டு விழாவில் நாம் எடுக்கவேண்டிய சூளுரை - ஜாதி, மதவாத சக்தி என்னும் தீயை அணைக்கும் படை வீரர்களாக மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராடுவோம் என்றார்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ப.மாணிக்கம் நூற்றாண்டு நிறைவு விழா

நேற்று (4.3.2023) மாலை சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ் மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ப.மாணிக்கம் நூற்றாண்டு நிறைவு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

இலட்சியத்திற்கு - கொள்கைக்கு எடுக்கக்கூடிய விழா!

புரட்சித் தோட்டத்தில் தியாகத்தின் திருவுருவமாக மலர்ந்து, காய்த்து, கனிந்த அருமைத் தோழர் மாமனிதர் திரு.மாணிக்கம் அவர்களுடைய நூற்றாண்டு நிறைவு விழா - அவருடைய சிறப்புமிகுந்த இலட்சியத்திற்குக் கொள்கைக்கு எடுக்கக் கூடிய விழாவாக இருக்கக் கூடிய இந்த விழாவிற்குத் தலைமை தாங்கக்கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் அருமைத் தோழர் இரா.முத்தரசன் அவர்களே,

இந்த சிறப்பான நிகழ்விற்கு வரவேற்புரையாற்றிய மாநில துணை செயலாளர் தோழர் நா.பெரியசாமி அவர்களே,

 முன்னிலையேற்றிருக்கக் கூடிய சுப்பராயன் அவர்கள் மிக அருமையான சிறந்த உரையை ஆற்றி அமர்ந்திருக்கிறார்கள்;

நூற்றாண்டு நிறைவு விழா மலரை முதலமைச்சர் பெற்றுக்கொண்டார்!

அதுபோலவே, தியாகத்தின் திருவுருவமாகவும்,  எளிமையின் சின்னமாகவும் இருக்கக்கூடிய தமிழ் நாட்டின் மூத்த தலைவர், அய்யா சங்கரய்யா அவர் களுக்கு அடுத்தபடியாக இருக்கக்கூடிய, தியாகத்திலும், வயதிலும், தொண்டிலும் சிறப்பாக இருக்கக்கூடிய அடுத்த தலைவர் என்ற பெருமைக்குரிய தோழர் இரா.நல்லகண்ணு அவர்கள், இந்நிகழ்ச்சியில், மாணிக்கம் நூற்றாண்டு நிறைவு விழா மலரை வெளியிட, அதனைப் பெற்றிட்ட இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய திராவிட நாயகனாக, ஒப்பற்ற திராவிட மாடல் ஆட்சியினுடைய சரித்திர நாயகராக இருக்கக்கூடிய நம்முடைய மாண்பு மிகு மானமிகு முதலமைச்சர் அவர்களே,

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பாக உரை யாற்றிய புதுச்சேரி மாநில கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சலீம் அவர்களே,

தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் தோழர் வேல்முருகன் அவர்களே,

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அவர்களே,

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான தோழர் அப்துல் சமது அவர்களே,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன் அவர்களே,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் அன்பிற்குரிய சகோதரர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களே,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களே,

திராவிட இயக்கத்தின் போர்வாள்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் திராவிட இயக்கத்தின் போர் வாள் அருமைத் தோழர் வைகோ அவர்களே,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அருமை நண்பர் கே.எஸ்.அழகிரி அவர்களே,

நன்றியுரை கூறவிருக்கக் கூடிய தோழர் மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் அவர்களே,

வெள்ளம்போல் திரண்டிருக்கக் கூடிய கொள்கை யாளர்களே, லட்சியவாதிகளான அருமைத் தோழர்களே, கொள்கைக் குடும்பத்தவர்களே, கூட்டணித் தோழர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீண்ட உரையாற்ற வேண்டிய தேவையில்லை. நிறைய சொல்லவேண்டி இருந்தாலும்கூட, ஏராளமான வர்கள் அருமையான கருத்துகளை இங்கே எடுத்து வைத்திருக்கிறார்கள்.

இதில், எனக்கு ஒரு சொந்தம், உரிமை உண்டு. அது என்னவென்றால், அருமைத் தோழர் மாமனிதர் மாணிக்கம் அவர்கள், இங்கே வேல்முருகன் அவர்கள் சுட்டிக்காட்டியதைப்போல, அவர் கடலூர்க்காரர்.

கடலூரில், எங்கள் தெருவிற்கு அருகில் இருந்தவரோடு பழகிய பான்மை உண்டு!

என்னதான் உலகப் பார்வை நமக்கிருந்தாலும், உள்ளூர்ப்பாசம் எப்பொழுதுமே போகாது. அந்த வகையிலே,  கடலூரில், எங்கள் தெருவிற்கு அருகில் இருந்தவரோடு பழகிய பான்மை உண்டு - முதல் உறவு, உரிமை!

கொள்கை உறவு, உரிமை எப்பொழுதும் உண்டு - அது நிரந்தரமானது. அதற்கடுத்தபடியாக, அண்ணா மலை பல்கலைக் கழகத்தில் நாங்கள் எல்லாம் உரு வாக்கப்பட்டவர்கள். எங்களுக்கு முன்னோடி என்றால், தோழர் பாலதாண்டாயுதம், தோழர் ப.மாணிக்கம் போன்றவர்கள்.

ஆகவே, அந்த உறவும் உண்டு. அதையும் தாண்டி, அவருடைய உருவத்தைப்பற்றி வைகோ அவர்கள் அருமையாகச் சொன்னார்கள்.

போராட்டக் குணத்தோடு, பல நேரங்களில் பெரியார் திடலுக்கு வந்து, விடுதலை அலுவலகத்திலேயே பல செய்திகள் குறித்து விவாதித்திருக்கிறார்.

அந்தச் செய்திகள் எல்லாம் ஒரு பெரிய அறிவுச் சுரங்கத்திலிருந்து கருத்துகள் வருவதுபோல, மிகச் சிறப்பாக இருக்கும்.

கம்யூனிஸ்ட் கட்சியை 

மிக வெகுவாகப் பாராட்டவேண்டும்

அப்படிப்பட்ட அவருடைய அருமையான தொண் டிற்காக - இன்றைக்கு விழா நடத்தி சிறப்பிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை மிக வெகுவாகப் பாராட்ட வேண்டும்.

அவர் மறைந்து 24 ஆண்டுகள் ஓடிவிட்டன என்ப தைப்பற்றி கவலைப்படாமல்; இன்றைக்கு நூற்றாண்டு நிறைவு விழாவை அவர்கள் நடத்துகிறார்கள். இது வெறும் விழா என்ற அளவிலே,, மலர், பாராட்டுரைகள், வாழ்த்துரைகள், நாம் அவருக்குக் காட்டுகின்ற வீர வணக்கங்கள் - செவ்வணக்கம் - திராவிட இயக்க வணக்கம் - பொதுவான வணக்கங்களையெல்லாம் தாண்டி, ஒரே ஒரு கேள்வி.

பொதுவாழ்க்கைக்கு வருகின்றவர்கள் 

எப்படி நடந்துகொள்ளவேண்டும்?

ப.மாணிக்கம் அவர்களைப் பார்த்தவுடன்,  மாமனிதர் என்று சொல்லுகின்ற நேரத்தில், பொது வாழ்க்கைக்கு வருகின்றவர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும்; கொள்கையை ஏற்கிறவர்கள் எப்படியெல்லாம் அதற்கு ஆயத்தமாகி விலை கொடுக்கவேண்டும் என்பதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம், எடுத்துக்காட்டு.

தந்தை பெரியாரின் கருத்து!

தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்கள், ‘‘லட்சியம் என்பதை அடையவேண்டுமானால், கஷ்ட நஷ்டங்கள், துன்பங்கள் என்கிற விலையைக் கொடுத்துப் பெறுவது தான் நியாயமானது’’ என்று சொல்வார்கள்.

அதற்கு ஏராளமான விலை கொடுத்துப் பெறுபவர் களுக்குப் பெயர்தான் கம்யூனிஸ்டுகள் - அப்படிப்பட்ட வர்கள்தான் அவர்கள் என்கிற உணர்வுதான் இன்றைக்கு நாடு முழுவதும் இருக்கிறது. அவர்கள் வேறு எதையும் எதிர்பார்ப்பவர்கள் இல்லை. அவர்களுக்குச் சொந்த பந்தங்கள் என்ப தெல்லாம் கொள்கை உறவுகள்தான். அவர்களுக்கு வரவுகள் என்று சொன்னால், அவை யெல்லாம் தியா கங்கள்தான்; கஷ்ட நஷ்டங்கள்தான், சிறைச்சாலைகள் தான், அடக்குமுறைகள்தான். இவை தான் பொது வாழ்க்கை என்று வாழ்வதற்கு அவர்களிட மிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.

மாமனிதர் மாணிக்கம் அவர்கள் வருகின்ற தலைமுறைக்கும் எடுத்துக்காட்டானவர்

பொதுவாழ்க்கைக்கு வரும்பொழுதே, எனக்கு இந்தப் பதவி கிடைக்குமா? அந்தப் பதவி கிடைக்குமா? என்று, சிவலோகப் பதவி, வைகுண்ட பதவி வரையில் தேடிக் கொண்டிருக்கக் கூடிய இந்தக் காலகட்டத்தில், மாமனிதர் மாணிக்கம் அவர்கள் வருகின்ற தலை முறைக்கும் எடுத்துக்காட்டானவர்.

பொதுவாழ்க்கையில் எப்படி இருக்கவேண்டும்?

கொள்கையாளர்கள் எப்படிப்பட்ட தியாகத்திற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்?

இவற்றைச் சொல்வதற்குத்தான் மாணிக்கம் அவர் களுடைய  நூற்றாண்டு நிறைவு விழா.

எனவே, அவர் வெறும் படமல்ல நண்பர்களே, பாடம்!

இங்கே அவருடைய படத்தைப் பார்க்கிறீர்கள்; பாடத்தோடு நாம் செல்லவேண்டும்.

ஒரே ஒரு கேள்வியை கேட்கிறேன்.

இந்தக் கொள்கைக் கூட்டணியினுடைய  பெருமை!

இன்றைக்கு தோழர் மாணிக்கம் இருந்தால், எப்படி போராடுவார்? என்ன கருத்தை சொல்லுவார்? எப்படி இயக்கத்தை நடத்துவார்? எத்தகைய கூட்டணியை கட்டுவார்? என்று நினைக்கிறோமோ, அதைத்தான் இப்பொழுது செய்திருக்கிறார்கள். இதுதான் இந்தக் கொள்கைக் கூட்டணியினுடைய - இந்த அரங்கத் தினுடைய பெருமை!

இங்கே ஒவ்வொருவரும், ஒவ்வொரு கோணத்தில் சொன்னார்கள்.

நம் முன் இருக்கின்ற சவால்களைப்பற்றி இங்கே எல்லோரும் சொன்னார்கள். எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களிலிருந்து, காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களிலிருந்து தோழர்கள் அத்தனை பேரும் சொன்னார்கள்.

இந்தியாவிற்கே கலங்கரை வெளிச்சம்!

இரண்டு நாள்கள் முன்பு சென்னையில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில், நம்முடைய மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் அவர்கள், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் அவர்கள், இந்தி யாவிற்கே கலங்கரை வெளிச்சம்போல, அரசியல் கப்பல்களுக்கு வழிகாட்டக் கூடிய வகையில், மிகத் தெளிவாக சொன்ன ஒன்றை இங்கே சுட்டிக் காட்டினார்கள்.

வருகிற 2024 ஆம் ஆண்டு நடைபெற விருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் என்பது இருக்கிறதே, அது வெறும் அரசியல் தேர்தல் அல்ல.

பல தலைமுறைகளுடைய வாழ்வை, இனி வரக்கூடிய தலைமுறையினுடைய வாழ்வை - வாழ்வா? சாவா? என்பதை நிர்ணயிக்கக் கூடிய மிக முக்கியமான லட்சியப் போராட்டமாக அதைப் பார்க்கவேண்டும் என்பதை எடுத்துச் சுட்டிக் காட்டினார்கள்.

‘‘யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதுதான் மிகவும் முக்கியம்’’

சுருக்கமாக, சுருக்கென்று தைப்பதைப்போல, முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள், ‘‘யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதுதான் மிகவும் முக்கியம்’’ என்று சொன் னதை, இன்று எல்லோரும் இங்கே வழி மொழிந்தார்கள்.

இதுதான் மிகவும் முக்கியம். தோழர் மாணிக்கம் இருந்தால், என்ன செய்வாரோ, அதைவிட ஒருபடி அதிகமாக நாம் இந்த இலக்கை நோக்கி உழைப் பதற்கு உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும் - இந்த மேடையில் சூளுரை எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஏனென்றால், மாணிக்கம் அவர்கள் நம்முடைய காலத்தில், எத்தனையோ தடைகள், எத்தனையோ ஆபத்துகள், எத்தனையோ அடக்குமுறைகளையெல் லாம் சந்தித்தார்கள். 

நினைவூட்டுவது என்னுடைய கடமை!

அதைத்தாண்டி நண்பர்களே, ஒரு வேறுபாடு உண்டு. இது அறிவார்ந்த அரங்கம்; இந்த அரங்கத்தில் அதை நினைவூட்டுவது என்னுடைய கடமை.

பழைய இன எதிரிகள், பெரியார் காலத்தில், ஆச் சாரியார் காலத்தில், மாணிக்கம் அவர்களுடைய காலத் தில் இருந்த எதிரிகளுக்கும், இப்பொழுது இருக்கின்ற எதிரிகளுக்கும் ஒரு வேறுபாடு உண்டு.

இன்றைய எதிரிகளுக்கு  இரண்டு அஜெண்டாக்கள்

அந்த எதிரிகளுக்கு ஒரே ஓர் அஜெண்டா தான் உண்டு. இன்றைய எதிரிகளுக்கு இரண்டு அஜெண் டாக்கள் உண்டு.

ஒன்று, ஒப்பன் அஜெண்டா - இன்னொன்று ஹிட்டண் அஜெண்டா.

ஒன்று வெளிப்படையாகத் தெரியக்கூடியது; இன்னொன்று மறைமுகமாக வைத்திருப்பது - சூழ்ச்சி நிறைந்தது.

பழைய போராட்ட முறைகளில், போர் முறைகளில் கண்ணிவெடிகள் கிடையாது. ஆனால், இப்பொழுது கண்ணிவெடிகள் உண்டு; முழுக்க முழுக்க மதத்தை அதற்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஓர் ஆளுநர் இங்கே இருந்துகொண்டு, பெரியார் பெயரைச் சொல்லமாட்டேன்; அம்பேத்கர் பெயரைச் சொல்லமாட்டேன் என்று அரசாங்கத்தினுடைய உரையை சட்டப்பேரவையில் படிக்கும்பொழுதுகூட சொல்ல மறுக்கிறார்.

காரல் மார்க்ஸ்மீது ஏன் சீறிப் பாய்கிறார்?

காரல் மார்க்சால்தான் தமிழ்நாடு கெட்டுப் போய் விட்டது என்று சொல்கிறார்.

ஏன் அவர் காரல் மார்க்ஸ்மீது சீறிப் பாய்கிறார்?

காரல் மார்க்ஸ் மனுதர்மத்தையும் கண்டித்தார் என்பதுதான் அதில் மிக முக்கியம். இந்த உண்மை பல பேருக்குத் தெரியாது.

ஏன் மாட்டைக் கும்பிடுகிறீர்கள்?

ஏன் குரங்கை வணங்குகிறீர்கள்? என்று கட்டுரை எழுதியிருக்கிறார்.

சனாதனத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வருகிறது என்பதற்காகத்தான் மதவெறியோடு காரல் மார்க்சை கண்டிக்கிறார்கள்.

முகமூடியைக் கிழித்து மக்களுக்கு விளக்கவேண்டியது நம்முடைய கடமை

எனவே, எதிரிகள் மிகப்பெரிய அளவிற்கு மறைமுகத் திட்டம் வைத்திருக்கிறார்கள்; முகமூடி போட்டு வருவார்கள்; அந்த முகமூடியைக் கிழித்து மக்களுக்கு விளக்கவேண்டியது நம்முடைய கடமையாகும். அந்தப் பணியைச் செய்வதற்குத்தான் நாம் அத்துணைப் பேரும் இருக்கிறோம்.

ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்

இவ்வளவு பெரிய சிறப்பு இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் வந்துவிட்டது என்பதைத் தாங்க முடியாமல்தான், ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி,.க்காரர்கள், வேண்டுமென்றே தமிழ்நாட்டில், பீகார்காரர்கள் இங்கே கொல்லப்படு கிறார்கள் என்கிற ஒரு பச்சைப் பொய்யை - ஜமுக் காளத்தில் வடிகட்டிய பொய் என்று பெரியார் சொல்லுவார் - அப்படிப்பட்ட ஜமுக்காளத்தில் வடி கட்டிய பொய்யை இன்றைக்குப் பரப்புகிறார்கள் என்றால், இந்த ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

மக்கள் மத்தியிலிருந்து இந்த ஆட்சியை அகற்றிவிட முடியாது; மக்கள் பேராதரவு என்கிற கற்கோட்டை யின்மீது கட்டப்பட்டு இருக்கின்ற ஆட்சிதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி.

இந்தியாவே திராவிட மாடல் ஆட்சியைப் பின்பற்றும் என்று சொல்லக்கூடிய அந்த உணர்வைப் பெற்று இருக்கின்ற காலகட்டத்திலே - அதை எப்படியாவது மழுங்கடிக்கவேண்டும் என்பதற்காகப் பல முயற்சிகளைச் செய்கிறார்கள்.

ஆளுநரை, அரசியல் கருவியாக்குகிறார்கள்; இன் னொரு பக்கத்தில் ஊடகங்களை விலைக்கு வாங்கு கிறார்கள். தவறான  செய்திகளைப் பரப்புகிறார்கள். 

தொழிலாளர்கள் இங்கே கொல்லப்படுகிறார்கள் என்கிற ஒரு பச்சைப் பொய்யைப் பரப்பினார்கள்!

அதனுடைய அடிப்படையில்தான், இவ்வளவு பெரிய பெருமை தமிழ்நாட்டிலிருந்து இந்தியா விற்கு வந்துவிட்டதே - இந்தியாவிலே ஒரு புதிய அரசியல் பாய்ச்சல் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக, பீகாரில், ஆர்.எஸ்.எஸி னால் உருவாக்கப்பட்டு, தொழி லாளர்கள் இங்கே கொல்லப்படுகிறார்கள் என்கிற ஒரு பச்சைப் பொய்யைப் பரப்பினார்கள்.

மார்க்ஸ் கொடுத்த வாக்கியம் என்ன?

உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்! என்பதுதானே மிக முக்கியம்.

தொழிலாளர்கள்மீது நமக்கொன்றும் கோபம் கிடை யாது; அவர்களை யாரும் வஞ்சிக்கப் போவ தில்லை. அதேநேரத்தில், அதை ஒரு சாக்காகப் பயன் படுத்திக் கொண்டு, எப்படியெல்லாம் ஆட்சியின்மீது அவதூறை உருவாக்கலாம் என்று திட்டமிடுகிறார்கள்.

ஆனால், இது எத்தனை நாளைக்கு? கெட்டிக்காரன் புளுகுக்கே உச்சவரம்பு எட்டு நாளைக்குத்தான். ஆகவே, இவர்களுடைய புளுகு எத்தனை நாளைக்கு என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்!

அவர்கள் எப்படி வேண்டுமானாலும், எந்தக் கருவி களை வேண்டுமானாலும், பயன்படுத்தி, எவ்வளவு கீழிறிக்கத்திற்கும் ஏன் செல்கிறார்கள் என்றால், தமிழ் நாட்டில் இருப்பதுபோன்று,  மதச்சார்பற்ற ஆட்சியை-  சமதர்ம ஆட்சியை ஒன்றியத்தில் 2024 இல் உருவாக்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான்.

தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் சமூகநீதி நாள்!

தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் நாளைத்தான் நம்முடைய முதல மைச்சர் சமூகநீதி நாள் என்று பிரகடனப்படுத்தினார்.

‘அனைவருக்கும் அனைத்தும்’ என்பதுதானே சமூகநீதி.

‘எல்லாருக்கும் எல்லாமும்’ - அதுதானே பொது வுடைமை - அதுதானே பொதுவுரிமை - அதுதானே மக்கள் நலன்.

ஒரு புதிய சமுதாயத்தை, ஒரு சோசலிச சமுதாயத்தை உருவாக்கவேண்டும்!

ஆகவேதான் நண்பர்களே, தோழர் 

ப.மாணிக்கம் அவர்களுடைய நூற்றாண்டு நிறைவு விழா -  அவருடைய படத்தைத் திறந்து வைத்து, நம்முடைய புகழ் வணக்கத்தை செலுத்துவது - அவருக்கு மலர் வெளியிடுவது - இவையெல்லாம் ஒரு புதிய சமுதாயத்தை, ஒரு சோசலிச சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்பதற் காகவே!

அந்த சோசலிச சமுதாயம் எல்லாருக்கும் எல்லாமுமாக இருப்பதாக இருக்கவேண்டும்.

பொதுவுடைமை கொள்கைகளை திசையெட்டும் சேர்ப்போம்!

‘‘பொதுவுடைமை கொள்கைகளை திசையெட்டும் சேர்ப்போம் - அதை புரிதலோடு உயிரெனக் காப்போம்'' என்றார் புரட்சிக்கவிஞர்.

அந்தக் கருத்து அடிப்படையானது. ஏனென்றால், இந்த நாட்டில் கொள்கைகள் வித்தியாசமாக, கட்சி களாகப் பிரிந்து இருக்கலாம்; தனித்தனி இயக்கங்களாக இருக்கலாம்; தத்துவங்களில் நாம் ஒன்றுதான்; பிரிக்கப்பட முடியாதவர்கள்; இணைக்கப்பட்டு இருக்கிறவர்கள்.

எதிரிகள் - இங்குள்ள தமிழர் ஒன்றாகச் சேர்ந்தால் - எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் என்று புரட்சிக்கவிஞர் சொன்னதைப்போல,

இங்குள்ள கருத்தியலை சொல்லும்பொழுது, எது விரிவடைகிறது?

மதச்சார்பற்ற இந்தியா!

சோசலிசம் நோக்கி செல்லுகின்ற இந்தியா!

ஜனநாயகக் குடியரசுத் தத்துவத்தில் நம்பிக்கை உள்ள இந்தியா!

மத வெறித் தீயை - ஜாதி வெறித் தீயை அணைக்கின்ற படை!

இந்த அணி, தோழர் மாணிக்கத்திற்கு நன்றி செலுத்தி, அவருக்கு நூற்றாண்டு நிறைவு விழாவை புகழ் வணக்கமாகக் கொண்டாடுவது வெறும் சாதாரண அணியல்ல நண்பர்களே - இது ஒரு தீயணைப்புப் படை - மத வெறித் தீயை - ஜாதி வெறித் தீயை - முதலாளித் தத்துவத் தீயை - சுரண்டுகிறவர்களுடைய தீயை அணைக்கின்ற தீயணைப்புப் படை - அந்தத் தீய ணைப்புப் படையின் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் வந்திருக்கிறார்.

தோழர் மாணிக்கம் காண விரும்பிய சோசலிச சமுதாயம் வருக!

அந்தத் தலைவருடைய உரையைக் கேட்போம்!

வாழ்க மாணிக்கம் புகழ்!

வருக அவர் காண விரும்பிய சோசலிச சமுதாயம்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  சிறப்புரை யாற்றினார்.

இந்நிகழ்வில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி கழக  துணை செயலாளர் சோ.சுரேசு ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment