ஆன்மிகம்... ஒருவகை பொய்.. இங்கே கடவுள், மதம் உள்ளவரை இந்த ஏமாற்றும் வித்தை அரங்கேறிக்கொண்டே இருக்கும். அவரவர் வசதிக்கேற்ப தங்கள் நிலைநிறுத்தலைக் காட்டிக்கொள்ள பொய் எனும் ஆயுதம் அவர்களுக்கு உதவும்.
மதம் சொல்லும் போதே தலைக்கேறிய போதையாய் நம்மை சூல் கொள்ளும். எதையுமே ஏனென்று கேட்காமல் சொல் வதை ஏற்க நம் மூளையின் நிளிஞி பகுதியை சலவை செய்யும்.
மனித தேவைகளை மறந்த தெய்வத் தின் நிலை தேடும் போலி பாசாங்கு வரும். ஞானமெனும் அறிவை மழுங்கடித்து மெய்ஞானமெனும் பூச்சுற்றும் வேலை செய்யும்.. ஞானமென்றால் அறிவு, அறி வெனில் அது தெளிவென்றே பொருள். பிறகெதற்கு மெய்யென்று பொய் சொல்லும் கூத்து.
ஆன்மிகவாதிகளை கூர்ந்து கவனி யுங்கள். கவனமாக நம்மை அவர்கள் பக்கம் இழுப்பார்கள்..எப்படியென்றோ, ஏனென்றோ கேள்வி எழுப்பினால்.. நம்மை புறக்கணித்து சரிவராதென்றும் ஏன் நம்பிக்கையில்லாமல் வந்தீர்கள் என்பார்கள். ஆன்மிகவாதிகளின் ஆயு தம் பொய்.. மக்களின் பயம்/பலவீனம் அவர்கள் மூலதனம். வேதம், கடவுளோடு தொடர்பு, மனிதனின் செயல்பாட்டால் விளையும் கெடுதிகளுக்கு, பரிகாரங்க ளென நம்மை மடமையில் வீழ்த்தும் வித்தை அறிந்திருப் பார்கள்.
துறவு அல்லது இல்லறத்தை விடுதல் என்பது இயற்கைக்கு முரணானது, காமம் இயல்பான நமது ஆசைகளின் வடிகா லாய் இன்பமெனும் நிலையை அடைதல். இங்கே காமம் அசிங்கமாகப் பார்க்கப்படு வதும். அதை தவறென்றும், கற்பென்றும் கட்டுபாட்டை கடுமையாக்கியதும்.
ஒழுக்கமென்று நம்பவைத்ததும்.. காமத்தில் திருட்டுத்தனம் வந்தது அதற்கு ஆன்மிகம் பெருந்துணையானது. எந்த ஜீவராசியும் காமத்தை அழுக்காக்கிய தில்லை. மதம் பேசும் பித்தர்கள், மக்களின் பலவீனத்தின் மீதே வீற்றிருப்பார்கள். சில செப்படி வித்தைகள் அறிந்திருப்பர். அதை விட கடைசி ஆயுதமாக காமத்தில் நம்மை நிறுத்தி, ஒருவகை ஆசையை தூண்டி அடிமைபடுத்தும் வேலை நடக்கும். காமம் அழகு. எந்த ஜீவராசியும் காமத்தை அசிங்கமென்றதில்லை மனி தனை தவிர. அதை திருட்டுத்தனமாக அடைய இந்த ஆன்மிகம் துணைக்கு வரும்.
ஆன்மிகம் பேசுவோரை, மதபோதகர் களைப் பாருங்கள்; தான் மட்டுமே சரி - தன் கடவுள் மட்டுமே சரி, நாம் மட்டுமே நேரான பாதையில் செல்கிறோமென்று மூளைச் சலவை நடத்துவர். ஒருவகை போதை தரும் சொற்களால் நம்மை கட்டிப் போடும் சாகசம் அறிந்து பிற வழிபாடுகளின் மீது வெறித்தனமான வன்மத்தை விச விதையை தங்களை பின்பற்றும் மக்களி டம் விதைக்கும் கேடுகெட்டவர்கள். தங்களுக்குள் போட்டிவந்துவிட்டால் அவர்களின் கடந்த கால நிகழ்கால அசிங் கங்களை பொதுவெளியில் வைத்து அதற்கு ‘இறைவனை’ துணைக்கழைத்து விவாதிப்பார்கள். ஒருவரின் தனிப்பட்ட விடயத்தை நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும். பேச வேண்டுமென்ற அடிப் படை அறிவுகூட இல்லாமல் நான் யோக்கியன் - அவன் அயோக்கியன் என்கிற ரீதியில் கதைப்பதற்கு பெயர் இவர்கள் மொழியில் ஒழுக்கம்.
இப்போதெல்லாம் ஆன்மிகம், அரசிய லென்று ஆகிவிட்டது அது எவ்வளவு தீமையை தருகிறதென்பதற்கு நடந்தேறும் நிகழ்வுகளே சாட்சியம் வகிக்கின்றன. எதை உண்பது என்பதில் தொடங்கி எதை செய்ய வேண்டும் - எதை பேசவேண்டு மென திணிக்கிறார்கள். எதுவாகயிருந் தாலும் அது திணிக்கப்படுமேயானால் அது மக்கள் மனங்களிலிருந்து அறுந்து விழும்.
இந்த உலகில் மனிதம் பேசுகிற இல்லா ததை இல்லையென்று உரக்கச்சொல்லி, பொய் புரட்டு இதிகாசம் வேதம் ஜாதி சடங்கு என மூடமும் மடைமையை புறக்கணித்து அறிவின் நிழலில் நிற்கிற இயற்கையை அதன் வழியில் நம்புகிற வழிமுறையே காலம் கடந்தும் நிலைக்கும் அதற்குப் பெயர் நாத்திகமென்றால் அதுவே உலகிற்கு அமைதியை செழிப்பை உயர்வை நம்பிக்கையை ஒற்றுமையை தரும்.. மதமென்பது ஒருவகை பிரிவினை. அதில் கடவுள், ஆன்மிகம் என்ப தெல்லாம் ஒருவகை ஏமாற்று. இது எல்லா மதத்திற்கு பொருந்தும். நானே உயர்ந் தவன் என்மதமே சரியென்கிறதைவிட அயோக்கியத்தனம் வேறேதுமில்லை.
அன்பே சிறந்த வழி.
- ஆலஞ்சியார், குவைத்
No comments:
Post a Comment