புதுடில்லி, மார்ச் 29 சமஸ்கிருதத்தை அலுவல் மொழி ஆக்கும் திட்டம் இல்லை என்று மக்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்தது.
நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, ''சமஸ்கிருதத்தை ஒன்றிய அரசின் தகவல் தொடர்பு மற்றும் அலுவல் மொழி ஆக்கும் திட்டம் உள்ளதா?'' என்று பா.ஜனதா உறுப்பினர் சுப்ரத் பதக் கேள்வி எழுப்பினார்
அதற்கு ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா கூறியதாவது:- "இல்லை. சமஸ்கிருதத்தை அலுவல் மொழி ஆக்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 343(1)ஆ-வது பிரிவுப்படி, ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக ஹிந்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் 588 நோயாளிகளுக்கு
தலா ரூ.22 லட்சத்தில் மருத்துவ சிகிச்சை
சென்னை,மார்ச்29- முதலமைச்சரின் விரி வான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் 588 பேருக்கு தலா ரூ.22 லட்சத்தில் சிகிச்சை அளிக் கப்பட்டுள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இந்தியாவின் தலைநகரமாக தமிழ்நாடு விளங்குகிறது. தொடர்ந்து 6 முறை உறுப்புக் கொடை சிறந்த மாநிலத்துக்கான ஒன்றிய அரசு விருதை தமிழ்நாடு பெற்றுள்ளது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்துடன், பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா என்ற திட்டத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படுகிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப் பீட்டுத் திட்ட பயனாளி குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. அதேபோல், ஆண்டு வரு மானம் ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment