வட மாநில தொழிலாளர்கள் குறித்து முகநூலில் பொய்யான தகவல் பதிவிட்டவர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 20, 2023

வட மாநில தொழிலாளர்கள் குறித்து முகநூலில் பொய்யான தகவல் பதிவிட்டவர் கைது

திருப்பூர், மார்ச் 20- வட மாநில தொழிலாளர்கள் குறித்து பொய்யான தகவலை முகநூல் பக்கத்தில் பதிவிட்ட நபர் பீகாரில் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்களுக்கு எதிரான வதந்தி மற்றும் பொய் செய்திகளை சிலர் பரப்பி வந்தனர். இந்த நிலையில் வட மாநில தொழிலாளர்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு உதவி பெறும் வகையில், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறப்புக் கட்டுப் பாட்டு அறை அமைக்கப்பட்டு கடந்த 2 வாரங்களாக செயல்பட்டு வருகிறது.

இந்த கட்டுப்பாட்டு அறையில் அவிநாசி காவல் நிலைய முதல் நிலை காவலர் வேல்முருகன் இருந்தபோது, கடந்த 4ஆம் தேதி இரவு 10 மணிக்கு தனது முகநூல் பக்கத்தை பயன்படுத்தியபோது, ‘ஹெட்லைன்ஸ் பீகார்' என்ற முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் திருப்பூரில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 12 பேர் படுகொலை செய்யப்பட்டதாக தவறான தக வல் பதிவிட்டதை பார்த்தார். இவ்வாறு பரப்பப்பட்ட பொய் யான வதந்தியானது, மக்களி டையே பொது நல்லிணக்கம் மற்றும் அமைதியை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டதாகும். இது தொடர்பாக முதல்நிலை காவலர் வேல்முருகன் அளித்த புகாரின் பேரில், திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்கு பதிந்தனர்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவின்படி, காவல் துணை கண்காணிப்பாளர் கோபா லகிருஷ்ணன் தலைமையில், காவல் ஆய்வாளர் சித்ராதேவி, தலைமைக் காவலர் சந்தானம், முதல் நிலைக் காவலர்கள் கருப்பையா, முத்துக்குமார் மற்றும் காவலர் குமரவேல் ஆகியோர் அடங்கிய தனிப்படை கடந்த 10ஆம் தேதி பீகார் மாநிலத்துக்கு சென்றிருந்தனர்.

பீகார் மாநில காவல்துறை உதவியுடன், ஆதார் கார்டில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சென்று விசாரணை செய்ததில், அங்கு இல்லாத நிலையில் அவரது அலைபேசி சிக்னலை தொடர்ந்து கண்காணித்ததில் ரத்வாரா என்ற இடத்தில் அந்த நபர் தலை மறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பீகார் மாநிலம் ஹத்தாரி பர்ஹாடு கிராமத்தை சேர்ந்த உபேந்திரா ஷனி (32)யை கைது செய்தனர்.

No comments:

Post a Comment